மதுரை: காதலிக்கும் போது சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவேன் என்று மிரட்டுவதாக, நாகர்கோவிலை சேர்ந்த முகமது என்பவர் மீது பெண் ஒருவர் புகார் அளித்தார். அதனடிப்படையில், நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் முகமதை மார்ச் 10ஆம் தேதி கைது செய்தனர்.
இதையடுத்து முகமது தனக்கு ஜாமீன் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பு நேற்று (ஏப்.13) விசாரணைக்கு வந்தது. அப்போது, முகமது தரப்பில், இதுவரை எந்த புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. போலீசாரும், அதை உறுதிசெய்தனர்.
இதையடுத்து நீதிபதி, மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படும். ஆனால், காதலிக்கும் போது எடுக்கப்பட்ட அனைத்து புகைப்படங்கள், வீடியோக்கள் அழிக்கப்பட வேண்டும். அதற்கான, கடவுச்சொல்யை (password) மனுதாரர் விசாரணை அதிகாரியிடம் கொடுக்க வேண்டும். குறிப்பாக, மனுதாரர் தலைமறைவாக கூடாது. இதனிடையே மனுதாரருக்கான சாட்சியங்கள் அழிக்கப்பட்டுவிடக்கூடாது. இதனை விசாரணை அதிகாரி உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: காதல் தோல்வியால் தோழிகளுடன் விஷம் குடித்த காதலி!