இது தொடர்பாக நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் வழக்கறிஞர் கண்ணன் என்பவர் முறையீட்டை வைத்தார். அதில், ” தீபாவளியன்று தெற்கு மாசி வீதியில் ஏற்பட்ட ஜவுளிக் கடை தீ விபத்தில், தீயை அணைக்கச் சென்ற வீரர்கள் இருவர் கட்டட இடிபாடுகளில் சிக்கி பலியாயினர்.
இந்நிலையில், மதுரை நகர் பகுதிகளில் தீ விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாமல் இருக்கக்கூடிய கட்டடங்களை, தீயணைப்பு துறையினர் தற்போது ஆய்வு செய்து நூற்றுக்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
விதிமீறல்கள் தெரிந்திருந்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் இரண்டு உயிர்கள் பறிபோயுள்ளன. முறையாக ஆய்வு செய்து இருந்தால் உயிரிழப்புகள் தடுக்கப்பட்டிருக்கும். இதுகுறித்து தினகரன் நாளிதழிலும் செய்தி வெளியாகியுள்ளது. எனவே, அதனடிப்படையில் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் “ எனக் கோரப்பட்டுள்ளது. இதனை பரிசீலிப்பதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.
இதையும் படிங்க: முகூர்த்தத்தால் ஆயிரத்தைக் கடந்த மல்லிகை விலை