ETV Bharat / city

அரசு நிலத்தை பட்டா போட்ட வழக்கில் ஜாமீன் மனு ஒத்திவைப்பு

author img

By

Published : Apr 20, 2022, 12:35 PM IST

தேனியில் அரசு புறம்போக்கு நிலத்தை முறைகேடாக பட்டா போட்டு குவாரி நடத்திய வழக்கில், அதிமுகவை சேர்ந்த அன்ன பிரகாஷ் ஜாமீன் கோரிய மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

madurai hc adjourned bail petition in Theni land scam

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் உள்ள 182 ஏக்கர் அரசு நிலம் அதிமுக ஆட்சியில், அதிகாரிகள் துணையோடு பலருக்கு முறைகேடாக பட்டா மாறுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் குவாரி நடத்தப்பட்டது. இதுதொடர்பாக அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் மீது சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இந்த வழக்கில், அதிமுக நிர்வாகி அன்ன பிரகாஷ், ஜாமீன் வழங்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி முரளிசங்கர் முன்பாக இன்று (ஏப். 20) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில், உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், நிபந்தனையுடன் ஜாமீன் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பில், அவரது உடல்நலம் குறித்து கவனத்தில் கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: பெண் எஸ்.பி பாலியல் புகார் வழக்கு: ஆண் எஸ்.பி.,யின் மனுவை பரிசீலிக்க அரசுக்கு உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.