ETV Bharat / city

மணல் கடத்தல் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு - Smart City Plan

திருநெல்வேலி: பேருந்து நிலைய கட்டுமானத்தின் போது மணல் கடத்தலில் எத்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது? எத்தனை நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து விசாரணை அலுவலர் ஆஜராகி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மணல் கடத்தல் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

author img

By

Published : Oct 15, 2020, 4:48 AM IST

திருநெல்வேலியை சேர்ந்த சுடலைகண்ணு என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், " கடந்த 2018ஆம் ஆண்டு திருநெல்வேலி பேருந்து நிலையத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்ட திட்டமிட்டு பணிகள் நடைபெற்றன. அப்போது பேருந்து நிலையத்தில் அடித்தளம் அமைக்க சுமார் 30 அடி ஆழத்திற்கு குழி தோண்டப்பட்டது. பேருந்து நிலையத்திற்கு அருகே தாமிரபரணி ஆறு உள்ளதால், 30 அடி பள்ளத்தில் ஆற்று மணல் இருந்தது. இதனை நெல்லை மாநகராட்சி அலுவலர்கள் சட்ட விரோதமாக கடத்த முயன்றனர். அதில் பல லோடு மணல் கேரளாவிற்கு கடத்தப்பட்டது.

இது தொடர்பாக உயர் அலுவலர்களிடம் மனு அளித்த பின்பு, 30 அடி பள்ளத்திலிருந்து எடுக்கப்பட்ட மணல் அள்ள பொது ஏலம் விட அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து திருநெல்வேலி மாநகராட்சி அலுவலர்கள் சிலர் அரசியல் பிரமுகர்கள் உடந்தையோடு குறைந்த மதிப்பில் ஏலம் விடபட்டது. எனவே 30 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு மணல் மற்றும் களி மண்ணை சட்ட விரோதமாக விற்பனை செய்தவர்கள் மீதும், மணல் கடத்தலுக்கு துணை போன அலுவலர்கள் மீதும் சிறப்பு விசாரணை குழு அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி கிருபாகரன் புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் பேருந்து நிலையம் கட்டமைப்பின் போது எடுக்கப்பட்ட மணல் குறித்து திருச்சி மற்றும் திருநெல்வேலி பொறியியல் கல்லூரி சார்பாக ஆய்வு நடத்தப்பட்டு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது என்றனர்.

இதனைத் தொடர்ந்து நீதிபதிகள் இந்த மணல் கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் எத்தனை வழக்குகள் பதிவு செய்துள்ளனர், அதில் எத்தனை நபர்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, வழக்கின் தற்போதைய நிலை என்ன என்று கேள்வி எழுப்பினர். பின்னர் இந்த வழக்கின் விசாரணை அலுவலர் ஆஜராகி வழக்கின் தற்போதைய நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் திருநெல்வேலி மாநகராட்சி சார்பாகவும், மணல் கடத்தல் தொடர்பாக நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இந்த வழக்க விசாரணையை அக்டோபர் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: உலக மனநல தினம் : மனநலம் பாதிக்கப்பட்டு சுற்றித் திரிந்தவரை அழகுபடுத்திய தொண்டு நிறுவனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.