மதுரை: பெத்தானியாபுரம் பகுதியில் ஆயுர்வேத மருந்துகள் விற்பனை என்கிற அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கிவந்துள்ளது. இந்நிறுவனம் ஆர்வமுள்ளவர்களைப் பங்குதாரர்களாகச் சேர்த்துவந்தது எனவும், தன்னையும் அதுபோன்று ஒரு பங்குதாரராகச் சேர்ப்பதாகவும் கூறி ஏமாற்றிவிட்டதாக ஈஸ்வரி என்பவர் பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் புகார் அளித்தார்.
இதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பொருளாதார குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அந்நிறுவனத்தின் உரிமையாளர் பாலமுருகன், அவரது மனைவி இந்திரா பானுமதி ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் பலரிடமும் இதேபோன்று ஏமாற்றியது தெரியவந்தது.
தொடர்ந்து இருவரையும் கைதுசெய்த குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தம்பதியினரிடம் பணத்தைப் பறிகொடுத்த மற்ற உறுப்பினர்கள் புகார் அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரூ. 3 கோடி மதிப்புள்ள வீடு அபகரிப்பு-விசிக பிரமுகர் உள்பட மூவர் கைது