திண்டுக்கல் மாவட்ட பழனி கட்டபொம்மன் தெரு பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்ற (25) இளைஞருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, நேற்று மதுரை அரசு கரோனா சிறப்பு சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், தொடர் மூச்சுதிணறல் காரணமாக இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
உயிரிழந்த இளைஞரின் எடை 140 கிலோ என்பதால், அவரது உடலை ஆம்புலன்சில் ஏற்ற முடியவில்லை. இதனால் மருத்துவமனையில் வெளியில் கடந்த இரண்டு மணி நேரமாக உடல் கேட்பாரற்று போடப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு கேட்டபோது, உடனடியாக நடவடிக்கை எடுத்து உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்வதாகத் தெரிவிக்கப்பட்டது.