ETV Bharat / city

மார்க்கெட்டில் உள்ள கடைகளை இடித்து புதிய கடைகள் கட்டிய பின்பே ஏலம் - உயர் நீதிமன்றம் உத்தரவு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரையில் உள்ள மேலூர் தினசரி மார்க்கெட் கடைகளை ஏலம் விடுவதற்கு மேலூர் நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ள அறிவிப்பாணையை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Feb 28, 2022, 7:15 PM IST

மதுரை, மேலூர் பகுதியை சேர்ந்த மணவாளன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "மேலூர் தினசரி மார்க்கெட் 1991ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதில், 106 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட் 30 ஆண்டுகளாக மேலூர் தாலுகாவில் உள்ள விவசாயிகள் மற்றும் குடியிருப்பாளர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

2001ஆம் ஆண்டு இங்கு பொதுக்கழிப்பிடம் ஒன்று கட்டப்பட்டது அந்த கழிப்பிடம் கட்டிய நாளிலிருந்து தற்போது வரை பயன்பாடு இல்லாமல் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இதனால், வியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் அடிப்படை வசதி இல்லாமல் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் கடைகள் பாழடைந்த கட்டிடங்கள் வலிமை இல்லாமல் பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் மேலூர் நகராட்சி ஆணையர் கட்டிடத்தின் கட்டமைப்பு உறுதித்தன்மையைக் கண்டறியாமலும், ஆபத்தான கட்டமைப்பை இடிக்காமலும் 11.01.2022 ம் தேதியன்று மேலூர் தினசரி மார்க்கெடில் உள்ள கடைகளை ஏலம் விடுவதற்கு ஆணை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

எனவே, மேலூர் நகராட்சி ஆணையர் 11.01.2022 ஆம் தேதியன்று பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்யவும், உடனடியாக கடைகளை இழுத்து புதிய கடைகள் கட்டுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்." என மனுவில் கூறியுள்ளார். இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், மேலூர் தினசரி மார்க்கெட் கடைகளை குத்தகைக்கு விடுவதற்காக மேலூர் நகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், மார்க்கெட்டில் உள்ள கட்டிடங்களை கிடைத்து புதிய கட்டிடங்கள் கட்டிய பின்பு குத்தகைக்கு விட உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: ஜெயக்குமாருக்கு மார்ச் 11 வரை நீதிமன்ற காவல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.