ETV Bharat / city

காவல் விசாரணையின் போது சிறுவன் இறப்பு - சிபிசிஐடி அறிக்கை கேட்ட நீதிமன்றம் - காவல் விசாரணையின் போது சிறுவன் இறப்பு

காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட சிறுவனின் இறப்பிற்கு காரணமான காவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி வழக்கில் சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைகிளை உத்தரவிட்டுள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரைகிளை
உயர்நீதிமன்ற மதுரைகிளை
author img

By

Published : Feb 28, 2022, 1:38 PM IST

மதுரை, கோச்சடையைச் சேர்ந்த ஜெயா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "திருட்டு வழக்கு தொடர்பாக விசாரிப்பதற்காக என் மகன் முத்து கார்த்திக்கை, கடந்த 2019-ல் எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல், அழைத்துச்சென்ற நிலையில், சட்டவிரோத காவலில் வைத்து விசாரித்துள்ளனர்.

காவல்துறையினர், என் மகனை கடுமையாக தாக்கியதில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற என்மகன் கடந்த 2019 ஜனவரி 24ல் உயிரிழந்தார். இந்த வழக்கை ஏற்கனவே நீதிமன்றம் சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட்டது. காவல்துறையினர் என் மகனை சட்டவிரோத காவலில் கடுமையாக தாக்கியதன் காரணமாகவே இறந்துள்ளார். எனவே, எனது மகனின் இறப்பிற்கு காரணமான எஸ்.எஸ். காலனி காவலர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் முதற்கட்ட அறிக்கைக்காக காத்திருப்பதாகவும், அறிக்கை கிடைக்கப் பெற்றவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நீதிபதி," வழக்கு தொடர்பாகவும், வழக்கில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க: அமைச்சர் ஜெயக்குமரை சிறையில் சந்தித்த ஓ.பன்னீர் செல்வம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.