மதுரை: கர்நாடகாவில் வசிக்கும் மதுரை கருப்பாயூரணி, பிள்ளையார் கோயிலைச் சேர்த்தவரின் 11 வயது மகள், இடுப்பு வலி, கை கால் வலி, மூட்டு வலியால் நடக்க முடியாமல் அவதிபட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 8ஆம் தேதி மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் குழ்த்தைகள் நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, முடக்குவாதப் பிரிவில் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்னர் ஒரு வாரமாகியும் நோயின் பாதிப்பு குறையாமல் கால்கள், கைகள், கழுத்துக்கு கீழ்ப்பகுதி நரம்புகள் அனைத்தும் செயல் இழந்ததால குழந்தைகள் நல நீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார். அங்கு அக்குழந்தைக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
அவருக்கு ஐவிஐஜி (IVIG) எனும் விலை உயர்ந்த சிறப்பு உயிர் காக்கும் மருத்து அளிக்கப்பட்டும், எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் நரம்பியல் சிறப்பு மருத்துவர்கள் அறிவுரையின்படி சிறுநீரசு சிறப்பு மருத்துவர்கள் - மேற்பார்வையில், 6 முறை ரத்த சுத்திகரிப்பு (Plasmapharesis) சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தச் சிகிச்சையின் பலனாக, உடல்நிலை முன்னேறி 23 நாள்கள் கழித்து தானாக நடக்க ஆரம்பித்தார். மிக அதிக நாள்கள் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதன் பக்கவிளைவுகளை தடுப்பதற்காக கழுத்துப் பகுதியில் துளையிடுதல் (Tracheostomy) சிகிச்சை அளிக்கப்பட்டது.
இச்சிறுமிக்கு கலப்பு இணைப்பு திசு நோய் (mixed connective tissue disease) எனும் மிக அரியவகை நோய் கண்டறியப்பட்டு, அதற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. மதுரை இராசாசி மருத்துவமனையின் குழந்தைகள் நலம், நரம்பியல் துறை முடநீக்கியல் துறை, சிறுநீரகத்துறை, மயக்கவியல் நுறை, தோய் சிகிச்சை, இரத்த வங்கி, பிரியோதெரபி சிறப்பு மருத்துவ நிபுணர்கள், உணவியல் நிபுணர்கள் மற்றும் செவிலியர்களின் கூட்டு சிகிச்சையால் தற்போது சிறுமியால் நடக்கமுடிகிறது.
இச்சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் சுமார் ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை செலவாகி இருக்கும். அரசு மருத்துவமனையில் இந்த சிகிச்சைகள் அனைத்தும் இலவசமாக சிறந்த முறையில் பரிவுடனும், பாசத்துடனும் சிறுமிக்கு வழங்கப்பட்டது.
இதற்கிடையே சிறுமியின் தந்தை திடீரென இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்கிற்காக சிறுமியின் தாய் உள்பட அனைவரும் சென்றுவிட, IRCU பீரினின் செவிலியர்கள் தாய் தனகு குழந்தையை பேணுவது போல் பரிவும், பாசமும் காட்டி, தந்தை இறந்த செய்தி கூட தெரியாமல் பார்த்து கொண்டார்.
சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய மதுரை அரசு இராசாசி மருத்துவமனையின் குழந்தைகள் நலப்பிரிவுத் துறைத்தலைவர் பாலசங்கர், பேராசிரியர் நந்தினி குப்புசாமி, மருத்துவர் சிவகுமார், நரம்பியல் துறை மருத்துவர் மணிவண்ணன், சிறுநீரகத்துறை மருத்துவர் அருள், முடக்குவாத துறை மருத்துவர் ராஜமுருகன், மயக்கவியல் துறை மருத்துவர்கள் செல்வகுமார் மற்றும் பிரதீபா, தோல் நோய் சிறப்பு மருத்துவர் கீதாராணி ஆகிய அனைவரையும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை முதல்வர் ரத்தினவேல் பாராட்டினார்.
இதையும் படிங்க: 3,000 கிலோ ஹெராயின்: சென்னையில் 10 மணிநேரமாக தொடரும் என்ஐஏ ரெய்டு