2013ஆம் ஆண்டு மதுரை முனி சாலையைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்ற மருந்துக் கடைக்காரரைக் கடத்தி 15 லட்சம் ரூபாய் பணம் பறித்த வழக்கில் 7 பேருக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் 2017ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை வழங்கியது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தண்டனையை ரத்து செய்யக் கோரி மேல் முறையீடு செய்தனர்.
அந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று அந்த 7 பேரின் ஆயுள் தண்டனையையும் உறுதி செய்து உத்தரவிட்டது. இந்த வழக்கில் 7ஆவது குற்றவாளியான மதுரை மணி நகரத்தைச் சேர்ந்த கணேசனின் மனைவி அன்னலட்சுமி, தாயார் முத்துமாரி ஆகியோர் 4 வயது பெண் குழந்தையுடன் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பிரதான வாயிலின் அருகில் அழுது புலம்பியபடி தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பயோமெட்ரிக் வாக்கு இயந்திரம் - பள்ளி மாணவர்கள் சாதனை!
கணேசனின் தாயார் தனது கையில், "நாங்கள் வாழ்வதும் சாவதும் உங்கள் கையில் தான் உள்ளது நீதி அரசர்களே" என்ற வாசகம் அடங்கிய அட்டையைக் கையில் வைத்துக்கொண்டு, தனது மகனை விடுதலை செய்யக் கோரி அழுத படியும், கணேசனின் மனைவி அன்னலட்சுமி தனது கணவரை விடுதலை செய்யுங்கள் என அழுது புலம்பிக் கொண்டே தர்ணாவில் ஈடுபட்டனர்.
துணிப்பைகள் தயாரிப்பில் இறங்கிய தமிழ் ஆர்வலர்!
இதனால் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் பிரதான வாயிலின் முன்பு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் இரண்டு பெண்களுடன் சேர்த்து குழந்தையும் கைது செய்து காவல் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.