மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராமம் கொம்பாடி. இக்கிராமத்தில் உள்ள கண்மாயைத் தூர்வாரித் தர வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகள் இன்று(டிச.7) மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து கொம்பாடி ஊராட்சி மன்றத் தலைவர் தங்கம் கூறுகையில், "திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சார்பில் அப்பகுதியில் உள்ள கண்மாய்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இந்நிலையில் எங்கள் கிராமத்தில் உள்ள இரண்டு கண்மாய்கள் மட்டும் இதுவரை தூர்வாரப்படவில்லை. இந்தக் கண்மாய்கள் மூலம் கொம்பாடி கிராமத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசு அலுவலர்களிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டவில்லை. கண்மாய்கள் எல்லாம் தூர்வாரப்பட்டுகின்றன என்று அமைச்சர்களும் சட்டப்பேரவை உறுப்பினர்களும் தெரிவித்து வரும் நிலையில், எங்கள் கிராமத்தில் உள்ள இரண்டு கண்மாய்கள் மட்டும் இதுவரை தூர்வாரப்படவில்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 10 பேருக்கு மேல் பயணிக்கும் ஷேர் ஆட்டோ விபத்துக்குள்ளானால் நிவாரணம் கிடையாது: நீதிபதிகள் திட்டவட்டம்