மதுரை:நாடார் மகாஜன சங்க நிர்வாகத்தின் சார்பாக கடந்த 2019ஆம் ஆண்டிற்கான வரவு,செலவு கணக்கு மற்றும் அந்த ஆண்டின் ஆண்டறிக்கை ஆகியவைகளை மதுரை தெற்கு மாவட்டப்பதிவாளரிடம் அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையை அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் சங்கத்தின் சார்பில் தாக்கல் செய்தார். இதனை எதிர்த்து வெ.தங்கமணி தமிழ்நாடு பதிவுத்துறை ஐ.ஜியிடம் புகார் ஒன்றை அளித்தார்.
இந்தப்புகார் மனு மீதான விசாரணையைத்தொடங்க மதுரையில் உள்ள பதிவுத்துறை டி.ஐ.ஜிக்கும் ஐ.ஜி உத்தரவிட்டார். இதனடிப்படையில் பல தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் 4அன்று தாக்கல் செய்த அந்த அறிக்கைகளை ரத்து செய்து டி.ஐ.ஜி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் கரிக்கோல்ராஜ் மேல் முறையீடு செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள் அறிக்கையை ரத்துசெய்யும் அதிகாரம் பதிவுத்துறை டி.ஐ.ஜிக்கும் இல்லை எனவும், அதனை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டார்.
மேலும் கரிக்கோல்ராஜின் பொதுச்செயலாளர் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், அவர் அந்தப்பதவியில் தொடர முடியாது எனவும், சங்கத்தின் பொதுக்குழுவை கூட்ட முடியாது எனவும் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:தொடரும் மர்ம மரணங்கள்.. உடலை வாங்க மறுக்கும் உறவினர்கள் - தீர்வு என்ன?