ஐநாவால் அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனமான யூஎன்ஏடிஏபி மதுரை மாணவி நேத்ராவை ஏழை மக்களின் நல்லெண்ணத் தூதுவராக அறிவித்துள்ளது இதனையடுத்து மாணவி நேத்ராவுக்கு பல்வேறு தலைவர்களும் அமைப்புகளும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் காலையில் எழுந்ததும் நாளிதழ்கள் வாசிப்பு, பிறகு தனது பள்ளி சார்ந்த நூல்களை வாசித்தல் வீட்டில் தான் ஆசையாக வளர்த்துவரும் செம்பருத்தி மருதாணி செடிகளுக்கு நீர் ஊற்றுதல் அம்மாவின் சமையல் பணிக்கு ஆதரவாக வெளியே கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கி வருதல் என சுறுசுறுப்பாய் இயங்குகிறார்
ஈடிவி பாரத்திற்கு மாணவி நேத்ரா வழங்கிய சிறப்பு நேர்காணலில், "மதுரை அண்ணாநகரில் உள்ள ஃபஸ்கோஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயில்கிறேன். எனது ஆசிரியர் பள்ளியின் முதல்வர் மற்றும் தாளாளர் ஆகியோர் அளித்த பயிற்சியும் ஊக்கமுமே என்னுடைய இந்த உயர்வுக்குக் காரணம்.
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியின் போது எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு புத்தாடை இனிப்புகள் ஆகியவற்றை பள்ளியின் சார்பாக மாணவ-மாணவிகள் நாங்கள் வழங்கி வருகிறோம். இல்லாதவர்க்கு சேவை செய்வதை இளம் பருவத்திலேயே பள்ளி எங்களின் மனதில் விதைத்து உள்ளது" என்றார்.
'படித்தேன், படித்ததை செயல்படுத்தினேன், இனியும் செயல்படுத்துவேன்' - நெகிழ்சியூட்டும் நேத்ரா தனது தந்தையாரின் நண்பர்கள் செய்த துரோகம் காரணமாக தன்னுடைய 6 வயதில் தங்கள் குடும்பம் பட்ட இன்னல்கள், அதனால் பசி பட்டினியோடு வாழ நேர்ந்ததை கண்ணீருடன் மாணவி நேத்ரா நினைவுகூருகிறார். தனது வகுப்பில் தானும் தலைவராக இருந்து சக மாணவ மாணவியரை வழி நடத்தியதை இப்போதும் பெருமையாக கருதுகிறார்.பள்ளியின் முதல்வர் அருட்சகோதரி ஜெசிந்தா கூறுகையில், "எங்கள் மாணவியின் இந்த உயர்வு எங்கள் பள்ளிக்கும் ஆசிரியர்களுக்கும் நிர்வாகத்துக்கும் பெருமையளிக்கிறது. தன்னலம் பாராத நேத்ராவின் சேவை மனப்பான்மையால் இறைவன் அவரை பெரிதும் உயர்த்தி இருக்கிறான் என்றே நாங்கள் கருதுகிறோம். அதே போன்று அவரது எதிர்கால கனவான ஐஏஎஸ் தேர்விலும் வெற்றி பெற்று ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்ய வேண்டும்" என்பதே எங்களது ஆசீர்வாதம் என்றார்தங்களது மாணவிக்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தும் ஆசிரிய பெருமக்களின் கால்களில் விழுந்து தனது நன்றியை காணிக்கையாக்குகிறார் நேத்ரா. என்னுடைய ஆசிரியர்கள் தருகின்ற இந்த வழிகாட்டுதல் மூலமே என்னால் சாதிக்க முடிந்துள்ளது. ஐநா அவையில் பேச வாய்ப்பு கிடைத்தால் உலக மக்களிடமிருந்து வறுமை அகற்ற வலியுறுத்தி பேசுவேன் பசி பட்டினியால் மக்கள் ஒருபோதும் வாடக் கூடாது என்பதை லட்சியமாக கொள்வேன் என்கிறார் மாணவி நேத்ரா. எனது நிழலும் கூட உனக்கு நன்மை செய்யும்படியாக இருக்க விரும்புகிறேன் என்ற கிறிஸ்தவ முனிவர் அல்போன்சா மரியா ஃபஸ்கோவின் வாசகங்கள் மாணவி நேற்று ராவின் பின்னணியில் மிளிர்ந்து கொண்டிருக்கிறது.