ETV Bharat / city

திருச்சி சிவா மகனுக்கு ஜாமீன்! - பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளர் சூர்யா சிவா

தனியார் பேருந்தை கடத்தி சென்ற வழக்கில் கைதாகி சிறையில் உள்ள MP சிவா மகன் சூர்யா தினந்தோறும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என்ற நிபந்தனையுடன், ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தனியார் பேருந்தை கடத்தி சென்ற வழக்கு
தனியார் பேருந்தை கடத்தி சென்ற வழக்கு
author img

By

Published : Jul 12, 2022, 2:02 PM IST

திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா மகன் சூர்யா சிவா பாஜக ஓபிசி அணி மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவரது கார் மீது ஜூன் 11-ஆம் தேதி தனியார் பேருந்து மோதியது.

இதில், சேதமடைந்த தனது காரை சீரமைப்பதற்கான செலவுத்தொகையை தனியார் பேருந்து நிறுவனம் வழங்கவில்லை என்று கூறி, அந்நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு பேருந்தை ஜூன் 19-ஆம் தேதி கடத்திச் சென்றதாக சூர்யா சிவா மீது கன்டோன்மென்ட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி சூர்யா சிவா, உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஜி.இளங்கோவன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது சூர்யா தினந்தோறும் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இடவேண்டும் என நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.

இதையும் படிங்க: ஆபாச இணையதளத்தில் பாஜக செய்தி தொடர்பாளர் புகைப்படம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.