ETV Bharat / city

தமிழ்நாடு ஆங்கில பெயரை மாற்றக்கோரிய வழக்கு: தமிழ்நாடு அரசு உரிய முடிவெடுக்க உத்தரவு! - HC order news

மதுரை: தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தையான Tamilnadu என்பதை சரியான உச்சரிப்பு வரும் வகையில் "THAMIZHL NAADU" என மாற்றக் கோரிய மனுவை 8 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு வார்த்தை
வ்
author img

By

Published : Feb 4, 2021, 3:04 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரை சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “தமிழ்மொழி பழமையான தனிச்சிறப்புமிக்க மொழி. சிறப்பு ழகரம் தமிழ் மொழிக்கான ஆகச்சிறந்த அடையாள பெருமை. தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தை(Tamilnadu) பயன்பாடு டமிழ் நடு என உச்சரிப்பு வரும் வகையில் உள்ளது. அதனை "THAMIZHL NAADU" என மாற்றினால் உச்சரிப்பு சரியாக வரும்.

சங்கக் கால பாடல்கள் தொல்காப்பியம், அகநானூறு, புறநானூறு, பரிபாடல், மதுரைக்காஞ்சி, சிலப்பதிகாரம், கம்பராமாயணம் உள்பட பல இலக்கியங்களில் தமிழ் மொழிக்கான சிறப்பு ழகரத்துடன் பயன்பாட்டில் உள்ளது. தமிழ் மொழிக்கு மட்டுமே சிறப்பு ழகரம் என்னும் சிறப்பு உள்ளது. ஆகவே தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தையான tamilnadu என்பதை சரியான உச்சரிப்பு வரும் வகையில் "THAMIZHL NAADU" என மாற்றி உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு, ஆங்கிலேயருக்கும் வடமொழியினருக்கும் சிறப்பு ழகரம் உச்சரிப்பதற்கு வராது எனத் தெரிவித்தனர். அதற்கு மனுதாரர் தரப்பில், "தமிழ் மொழியிலேயே பெருமை மிக்க சிறப்பு ழகரம் உள்ளது.

பிற மாநிலத்தவருக்காக நமது சிறப்பை நாம் ஏன் இழக்க வேண்டும்? தமிழ்நாடு அரசின் செய்தித்துறை தரப்பில் வெளியிடப்படும் "வெற்றி நடை போடும் தமிழகம்" எனும் விளம்பரத்திலும் நாம் கோரிக்கை விடுப்பதைப் போலவே ஒளிபரப்பப்படுகிறது. ஆகவே தமிழ்நாடு என்பதன் ஆங்கில வார்த்தையை அதற்கான உச்சரிப்பு மாறாமல் வரும் வகையில் மாற்றியமைக்க வேண்டும்" என வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து நீதிபதிகள், இது தொடர்பாக உத்தரவை பிறப்பிக்க இயலாது. தமிழின் சிறப்பை கருத்தில்கொண்டு, தமிழ்நாடு தலைமைச் செயலர், உள்துறை செயலர், முதன்மைச் செயலர் ஆகியோர் 8 வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய முடிவெடுக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

இதையும் படிங்க...தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நிகழ்வுகள் உடனுக்குடன்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.