ETV Bharat / city

மத்திய அரசு வீடு கட்டும் திட்டத்தில் மோசடி: உள்ளாட்சித் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Jan 8, 2021, 5:15 PM IST

மதுரை: தூத்துக்குடி பகுதியில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில் நடைபெற்ற மோசடி குறித்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் உள்ளாட்சித் துறை, பஞ்சாயத்துராஜ் துறை இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைகிளை செய்திகள்
உயர் நீதிமன்ற மதுரைகிளை செய்திகள்

தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த தன்னீஸ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்திருந்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீவைகுண்டம், பலகயல், மஞ்சள்நீர்கயல் ஆகிய பகுதிகளில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் (பிரதமர் ஆவாஸ் யோஜனா) 2016 முதல் 2019ஆம் ஆண்டு வரை 82 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளன.

குறிப்பாக ஏற்கனவே வீடு உள்ளவர்கள், உயிரிழந்தவர்கள் பெயரில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் பெயரில் என இத்திட்டத்தின் கீழ் மோசடியில் ஈடுபட்டு பயனடைந்துள்ளனர். இது குறித்து பிப்ரவரி மாதம் புகார் அளித்தும் முறையாக விசாரணை நடத்தாமல், புகாரில் முகாந்திரம் இல்லை எனக் கூறி புகாரை நிராகரித்தனர்.

பின் நவம்பர் மாதம் புதிய புகார் ஒன்று அளிக்கப்பட்டது. இந்தப் புகாரின்பேரில் தற்போதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே எனது புகார் மனுவை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உள்ளாட்சித் துறை, பஞ்சாயத்துராஜ் துறை இயக்குநர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.

இதையும் படிங்க...பள்ளிகள் திறக்கவில்லை - திரையரங்கங்களுக்கு மட்டும் 100% அனுமதி எப்படி சாத்தியம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.