தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மனோகரன் புதூர் பேரூராட்சியில் முன்கள பணியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். வெளியூர் செல்வதற்காக அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது திடீரென வலிப்பு வந்து மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் அவரது உறவினர்கள், முன்கள பணியாளரான மனோகரனுக்கு தடுப்பூசி போட்டதன் காரணமாகவே இறந்துள்ளார் எனக் கூறியதோடு, அவரது உடலை வாங்க மறுத்து முற்றுகை போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கரோனாவிற்கு தடுப்பூசி போட்டுக்கொண்டதால் உயிரிழந்ததாகக் கூறப்படும் தூய்மை பணியாளரின் உடலை, மருத்துவ நிபுணர் குழு அமைத்து மறு உடற்கூராய்வு செய்து, அவரது இழப்புக்கான காரணத்தை கண்டறிய உத்தரவிடவேண்டும் என்றும், இதனை அவசர மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பாக வழக்கறிஞர் அழகுமணி இந்த முறையீட்டை முன்வைத்தார்.
இதற்கு நீதிபதிகள் மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரிக்கலாம் எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க...சூரப்பா மீதான விசாரணைக் குழுவிற்கு காலநீட்டிப்பு கேட்கத் திட்டம்