தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த பெருமாள்உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைதாக்கல் செய்திருந்தார். அதில், "விருதுநகர் மாவட்டத்தில் FL-2 அனுமதி பெற்று தனி நபர்கள் மனமகிழ் மன்றம் நடத்தி வருகிறார்கள். இந்த மனமகிழ் மன்றங்களில் உறுப்பினர்களைச் சேர்த்து , அவர்களுக்கு மது விற்பனை செய்ய அனுமதி பெற்ற நிலையில், தற்போது வெளி நபர்களுக்கும் மது விற்பனை செய்துதனியார் பார் போல் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் மனமகிழ் மன்றங்கள் பகல் 11 மணி முதல் இரவு 11 மணி வரை செயல்பட்டு வருகின்றன. இது அரசு டாஸ்மாக் கடை செயல்படுவதை விட அதிக நேரம் செயல்படுகின்றது. மேலும், அரசு டாஸ்மாக் கடையை விட மனமகிழ் மன்றங்களில் அதிக சலுகைகள் அளிக்கப்படும் நிலையில் ,உறுப்பினர்களை தவிர ,பொதுமக்களும் அதிகமாக செல்ல அனுமதிக்கப்படுவதால், தனியார் பார் போல் செயல்பட்டு வருகிறது.இது தொடர்பாக புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் மனமகிழ் மன்றங்களின் அனுமதியை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், நிதிபதி எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு தமிழக காவல்துறை தலைவர், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்தும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். அதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில்கடந்த 5 வருடமாக எத்தனை FL-2 மனமகிழ்மன்றங்ளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும்.மனமகிழ் மன்றங்களில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கைமற்றும் டாஸ்மாக்கில் இருந்து மனமகிழ்மன்றத்துக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படும் அளவுஎன மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அத்துடன் மாவட்ட வாரியாக மனமகிழ் மன்றங்கள் மீது பெறப்பட்ட புகார்களின் எண்ணிக்கை பதியப்பட்ட வழக்குகளின் விவரம் குறித்தும் டிஜிபிஅறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஏப்ரல் 22ஆம் தேதி ஒத்திவைத்தனர்.