ETV Bharat / city

’இந்துக்களே, திமுகவிடம் உஷாராக இருங்கள்’ - ஹெச்.ராஜா எச்சரிக்கை! - ஹெச் ராஜா எச்சரிக்கை

ஈ.வே.ராவுக்கு மாலையிட்டு கோஷமிட்டவர்களை கோயிலுக்குள் நுழைப்பதே திமுகவின் திட்டமாக உள்ளது என்றும், இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

all caste priests scheme of dmk
all caste priests scheme of dmk
author img

By

Published : Aug 20, 2021, 10:27 AM IST

Updated : Aug 20, 2021, 2:08 PM IST

மதுரை: திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, ”திமுகவின் 100 நாள்கள் ஆட்சி என்பதை மிகப்பெரிய தோல்வி என்று ஒரே வரியில் சொல்லிவிடலாம். 1967ஆம் ஆண்டு முதலே திமுகவின் வரலாறு இதுதான்.

ஆட்சிக்கு வந்ததும் நீட் ரத்து செய்யப்படும் என்று சொன்னார்கள், செய்துள்ளார்களா? தற்போது தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும் அதற்கு ஆய்வுக்குழு அமைக்கப்படும் எனவும் சொல்கிறார்கள்.

வகைதொகை இல்லாமல் குற்றம்சாட்டும் நிதி அமைச்சர்

வெள்ளை அறிக்கையில் வகைதொகை இல்லாமல் அதிமுக கடன் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார் நிதி அமைச்சர். ஆனால் திமுக அரசு கடந்த 90 நாள்களில் நாற்பதாயிரம் கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளனர். மேலும் 92,000 கோடி ரூபாய் வாங்கவும் திட்டமிட்டுள்ளனர்.

பொருளாதாரம் தெரிந்தவரின் பட்ஜெட்டா இது? விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துவது, நிதிநிலையை சீர் செய்வதற்கான அம்சம் இந்தப் பட்ஜெட்டில் இல்லை.

ஹெச்.ராஜா செய்தியாளர் சந்திப்பு

சாதி சண்டையை உருவாக்க முயற்சி

மின் வாரியம், போக்குவரத்து ஆகிய துறைகள் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ள நிலையில், அவற்றுக்குத் தீர்வு காணாமல், எப்படியாவது சாதி சண்டையை ஏற்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக ஒரு ஆணையை செயல்படுத்தி உள்ளனர். தற்போது அறிவித்துள்ள சட்டம் ஐந்து நிமிடங்களில் நீதிமன்றத்தில் அடிபட்டு போகும்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே அனைத்து சாதியினரும் அர்ச்சகராகவே உள்ளார்கள். மக்களை திசைத் திருப்பவே இதனை கொண்டுவருவதாக பொய் பரப்புகின்றனர். கோயில் நிறுவப்படும் முறையில் அதன்படியே பூஜைகள் நடைபெறும் என்பதை சட்டம் 26 சொல்கிறது. பிராமணர், பிராமணர் அல்லாதோரிடையே மோதலை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது.

தேசவிரோத சக்திகளும் திமுகவும்

குறிப்பாக ஈ.வே.ராவுக்கு மாலையிட்டு கோஷமிட்டவர்களை கோயிலுக்குள் நுழைப்பதே திமுகவின் திட்டமாக உள்ளது. இந்துக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தற்போது பள்ளிக்கல்வித்துறை முழுமையாக கிறிஸ்தவ அமைப்புகளாகவே மாறிப் போயுள்ளது. தேசவிரோத தீய சக்திகள் திமுகவுடன் கூட்டு சேர்ந்துள்ளன. இந்துக்கள் விழித்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: வாய்தா மேல் வாய்தா கேட்ட ராஜேந்திர பாலாஜி: கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம்

Last Updated : Aug 20, 2021, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.