ETV Bharat / city

சுட்டுக்கொல்லப்பட்டாரா ராஜ்கிரண்? - உடலை மறு உடற்கூராய்வு செய்யக் கோரி மனைவி மனு - உடலை மறு உடற்கூறாய்வு செய்ய வேண்டும்

இலங்கைக் கடற்படையினரால் உயிரிழந்த கோட்டைப்பட்டினம் மீனவர் ராஜ்கிரண் உடலை மறு உடற்கூராய்வு செய்ய வேண்டும் என அவரது மனைவி பிருந்தா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல்செய்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை
author img

By

Published : Nov 13, 2021, 12:30 PM IST

கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து விசைப்படகில் மூன்று மீனவர்கள் அக்டோபர் 18ஆம் தேதியன்று மீன்பிடிக்கச் சென்றுள்ளனர். அவர்கள் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும்போது, இலங்கைக் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டதால் மீனவர்கள் சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது.

இதையடுத்து, அவர்களை மீட்டுத் தருமாறு முதலமைச்சர் ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியிருந்தார். மூன்று மீனவர்களில் சுகந்தன் (22), சேவியர் (38) ஆகிய இருவர் இலங்கைக் கடற்படை வசம் இருந்தனர். மற்றொரு மீனவரான ராஜ்கிரண் (28) என்பவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து, உயிரிழந்த ராஜ்கிரண் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்க மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இலங்கைக் கடற்படையினரால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரணின் மனைவி பிருந்தா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல்செய்த மனுவில், "புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் விசைப்படகு மீன்பிடி இறங்குத் தளத்திலிருந்து ராஜ்கிரண் (28), சுகந்தன் (22), சேவியர் (38) ஆகிய மூவரும் ஒரு படகில் நடுக்கடலில் அக்டோபர் 19ஆம் தேதி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், எல்லை தாண்டிவந்து மீன்பிடித்ததாகக் கூறி தங்களது ரோந்துக் கப்பல் மூலம் மீனவர்களின் படகை இடித்ததில் படகு பழுதாகி நடுக்கடலில் மூழ்கியது. இதையடுத்து, சுகந்தன், சேவியர் ஆகிய இருவரை இலங்கைக் கடற்படையினர் மீட்டனர். இரண்டு நாள்கள் தேடலுக்குப் பிறகு ராஜ்கிரண் சடலமாக மீட்கப்பட்டார்.

இதையடுத்து, ராஜ்கிரணின் உடலைச் சர்வதேச எல்லையில் இலங்கைக் கடற்படை இந்திய கடற்படையிடம் ஒப்படைத்தது. நான் (பிருந்தா) உள்பட உறவினர்களிடம் பெட்டியிலிருந்த ராஜ்கிரணின் உடலை முழுவதும் திறந்து காட்டாமல் அடக்கம் செய்துவிட்டனர்.

இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டாரா ?
இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டாரா?

எனவே, எனது கணவர் ராஜ்கிரண், இலங்கைக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் எழுகிறது. புகைப்படத்தில் பார்க்கும்போது அவரது முகம், உடலில் காயங்கள் இருந்தது. எனவே, இது குறித்து தமிழ்நாடு காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய வேண்டும்.

எனது கணவர் ராஜ்கிரண், உடலை மறு உடற்கூராய்வு செய்து எவ்வாறு இறந்தார் எனக் கண்டறிய வேண்டும். காவல் துறை உயர் அலுவலர்களைக் கொண்டு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார். இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என மனுதாரர் வழக்கறிஞர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி சுவாமிநாதன் முன் முறையிட்டார்.

அப்போது, நீதிபதி வழக்கின் முக்கியத்துவம் கருதி, இந்த வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் எந்த நீதிபதி முன் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என நிர்வாக நீதிபதியிடம் அனுமதி பெற்று, நவம்பர் 15ஆம் தேதி விசாரணைக்கு வழக்கைப் பட்டியலிட உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: சூர்யாவின் படம் தியேட்டர்களில் திரையிட்டால் கொளுத்துவோம் - காடுவெட்டி குரு மருமகன் எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.