மதுரை: மதுரையின் பாரம்பரிய அடையாளமான பாண்டிய மன்னர்களின் மீன் சின்னத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் மூன்று மீன்கள் நீரூற்றில் துள்ளி விளையாடுவது போன்ற பித்தளை சிலைகளை மதுரை ரயில்வே நிலையத்திற்கு முன் 1999ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
ரயில் நிலைய மேம்பாட்டு பணியின்போது, அப்பகுதியில் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கு வசதியாக அம்மீன் சிலை அகற்றப்பட்டது.
இன்று பூமி பூஜை
அதனை மீண்டும் நிறுவக்கோரி பல்வேறு தரப்பிலிருந்தும் மதுரை ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கைகள் வந்தவண்ணம் இருந்தன. மதுரை தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பாகவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்ததைத் தொடர்ந்து சுமார் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நான்கு புறமும் வண்ண நிறங்களில் நீரூற்று அமைத்து அதில் மீண்டும் பாரம்பரிய மிக்க மீன் சிலை நிறுவுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.
அதற்கான பூமி பூஜை மதுரை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று (நவ. 6) நடைபெற்றது. இதில் மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை விவகாரம்: அதிமுகவை கிண்டல் அடித்த துரைமுருகன்!