மதுரையைச் சேர்ந்த பிரபல உணவகத்தின் உரிமையாளர் தனது கிளையை கைலாசாவில் திறக்க அனுமதிகோரி, நித்யானந்தாவுக்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் எழுதியிருந்தார். இதனையடுத்து சமூக வலைதளங்கள் மூலமாகப் பதிலளித்த நித்யானந்தா, அவரது உணவகத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறியிருந்தார்.
இந்தத் தகவல் பரிமாற்றம் சர்ச்சையாகி இருந்த நிலையில், தற்போது மதுரையைச் சேர்ந்த பாண்டித்துரை என்ற விவசாயி கைலாசாவில் இயற்கை விவசாயம் மேற்கொள்ள நிலம் ஒதுக்கித் தருமாறு வேண்டுகோள் விடுத்து எழுதியுள்ள கடிதம், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க... கைலாசா நாட்டில் ஹோட்டல் தொடங்க மதுரை தொழிலதிபர் நித்யானந்தாவுக்கு கடிதம்!