மதுரை : பிரபல நிறுவனங்களின் பெயரில் தேயிலைத் தூள், பெருங்காய பவுடர், பற்பொடி மற்றும் மூக்கு பொடி உள்ளிட்ட பொருள்களை போலியாக தயாரித்து சட்டவிரோதமாக விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு புகார்கள் வந்தன.
இதன் அடிப்படையில் மதுரை புது ராமநாதபுரம் பகுதியில் உள்ள தனியார் பண்டகசாலையில் தனிப்படை காவல்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பிரபல நிறுவனங்களின் பெயரில் மூட்டை மூட்டையாக டீ தூள் மற்றும் காபி பொடி, பெருங்காயம், மூக்குப்பொடி உள்ளிட்ட பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதையும் படிங்க : இந்த ஆண்டு இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் - அமைச்சர் கே.என்.நேரு