ETV Bharat / city

மதுரையில் போலி ஐஏஎஸ் அலுவலர் கைது! - Fake IAS officer arrested in Madurai

மதுரை: ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை ஆய்வுசெய்ய வந்ததாக நடித்த போலி ஐஏஎஸ் அலுவலர் கைது செய்யப்பட்டார்.

மதுரை
மதுரை
author img

By

Published : Nov 10, 2020, 5:18 PM IST

மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் சோமசுந்தரம் என்பவருக்கு தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்ட அடையாளம் தெரியாத ஒருவர், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பிரிவிலிருந்து பேசுவதாகவும் தன்னுடைய பெயர் செந்தில்குமார் ஐஏஎஸ் எனக் கூறி அறிமுகம் செய்துகொண்டு, தான் மதுரைக்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் குறித்து ஆய்வுசெய்ய வந்துள்ளதாகக் கூறினார்.

இதனை நம்பிய உணவு பாதுகாப்புத் துறை அலுவலர், அவரை காரில் அழைத்துக் கொண்டு மதுரை மாநகரின் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில், செந்தில்குமாரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சோமசுந்தரம், சென்னையில் உள்ள சுகாதாரத்துறை செயலருக்கு இவருடைய புகைப்படத்தை அனுப்பி சோதனை செய்தபோது போலியாவர் என்பது தெரியவந்தது.

உடனடியாக தல்லாகுளம் காவல் துறையினருக்கு அளித்த புகாரை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போலி ஐஏஎஸ் அலுவலரை கைதுசெய்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர் மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியைச் சேர்ந்த நல்லதம்பி என்பவரின் மகன் செந்தில்குமார் என்பதும் இவர் மருத்துவப் படிப்பை முழுமையாக முடிக்காமல் இருந்து வந்ததும் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு அவ்வப்போது உயர் அலுவலர் எனக் கூறி துறை அலுவலரைச் சந்தித்து மிரட்டியதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து அந்நபர் மீது மூன்று பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.