மதுரை: சித்திரைத் திருவிழாவின்போது பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட காவல் துறையின் சார்பாக, கள்ளழகர் இருக்கும் இடத்தை அறிந்து கொள்ள புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மதுரை காவலன் என்ற செயலியில் Track Alagar என்ற வசதியின் மூலம் பொதுமக்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன் மூலம் அருள்மிகு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதற்காக 14.4.2022-ம் தேதி அழகர் மலையிலிருந்து புறப்பட்டு மீண்டும் அழகர் கோயில் செல்லும்வரை, ஒவ்வொரு இடத்தையும் செல்போனில் Track Alagar என்ற Link மூலம் Map-ல் தெரிந்து கொள்ளலாம். இதனால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமத்தைத் தவிர்த்து கள்ளழகரை தரிசிக்க முடியும்.
கள்ளழகரை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் தங்களின் Android செல்போனில் உள்ள Play Store-ல் இலவசமாக மதுரை காவலன் செயலியை Download செய்து கொள்ளலாம். ஏற்கெனவே செயலியை Download செய்தவர்கள் அதனை அப்டேட் செய்த பின்னால் Track Alagar (கள்ளழகர் வருகை) என்ற Link மூலம் கள்ளழகர் இறங்கும் இடத்தை தெரிந்து கொள்ளலாம்.
Android ➡️ Playstore ➡️ Madurai Kavalan ➡️ Track Alagar
இதையும் படிங்க: 'என்னது.. அழகர் மதுரைக்குள்ள வந்தாரா..?' - அழகரின் ஆயிரமாண்டு வரலாறும் வியப்பில் ஆழ்த்தும் சிறப்பு தொகுப்பும்