ETV Bharat / city

கல்வி உதவித்தொகை: சிறுபான்மை மாணவர்களுக்கு காலநீட்டிப்பு வழங்கக்கோரி முறையீடு - சிறுபான்மை மாணவர்கள்

கல்வி உதவித்தொகை பெற சிறுபான்மை மாணவர்களுக்கு கால நீட்டிப்பு வழங்கப்பட வேண்டுமென மத்திய அமைச்சரிடம், சு. வெங்கடேசன் எம்பி கடிதம் தந்து நேரில் முறையிட்டார்.

வெங்கடேசன் எம்பி
வெங்கடேசன் எம்பி
author img

By

Published : Dec 17, 2021, 2:44 PM IST

மதுரை: கல்வி உதவித் தொகைக்கான பல திட்டங்களின் விண்ணப்ப கடைசித் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறுபான்மை மாணவர்களுக்கான 10ஆம் வகுப்பு வரையிலான உதவித் தொகை, சிறுபான்மை மாணவிகளுக்கான பேகம் ஹஸ்ரத் மகால் தேசிய உதவித் தொகை ஆகிய திட்டங்களுக்கான விண்ணப்ப தேதி டிசம்பர் 15 உடன் முடிந்துவிட்டது.

மேலும் நவம்பரில்தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. எனவே கால அவகாசம் போதாததால் பல மாணவர்கள் விண்ணப்பிக்க இயலாமல் திணறுகிறார்கள்.

மற்ற திட்டங்களுக்குக் கால நீட்டிப்பு இருக்கும்போது இந்த இரு திட்டங்களுக்கு மட்டும் அந்தச் சலுகை மறுக்கப்படுவது என்ன நியாயம்? மத்திய அரசின் சிறுபான்மை நலத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் தந்து நேரில் முறையிட்டார்.

இதனையடுத்து உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார் என இன்று (டிசம்பர் 17) அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் சு. வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: பள்ளி கழிவறை சுவர் இடிந்து விபத்து - 3 மாணவர்கள் உயிரிழப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.