ETV Bharat / city

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக மீது மக்கள் அதிருப்தி - செல்லூர் ராஜு - ops

முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீரை திறந்துவிட்ட விவகாரத்தில் திமுக அரசின் மீது தமிழ்நாடு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜு
செல்லூர் ராஜு
author img

By

Published : Nov 7, 2021, 12:38 PM IST

Updated : Nov 7, 2021, 2:35 PM IST

மதுரை: முல்லை பெரியாறு அணை திறக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வருகிற நவம்பர் 9ஆம் தேதி அதிமுக சார்பில் திமுக அரசைக் கண்டித்து மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நேற்று (நவ. 6) நடைபெற்றது.

ஜெயலலிதா ஆன்மா மன்னிக்காது

இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜூ,"முல்லை பெரியாறு அணையில் 142 அடி நீர் தேக்க அனுமதி பெற்றுத் தந்த ஜெயலலிதாவின் ஆன்மா திமுகவை மன்னிக்காது. தமிழர்களின் உரிமைகளைக் காக்கத் தவறிய திமுக அரசு, கையாலாகாத அரசாக உள்ளது.

முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் திமுக மீது மக்கள் அதிருப்தி - செல்லூர் ராஜு

கேரள அரசைக் கேள்வி கேட்காமல் அமைச்சர் துரைமுருகன் அதிமுக மீது தேவையின்றி விமர்சனம் செய்கிறார், காழ்ப்புணர்வுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர்களை வசை பாடியுள்ளார்.

சரமாரி கேள்வி

அதிமுக அரசு ஏன் அணையை ஆய்வு செய்யவில்லை என்று கேள்வி கேட்க அவருக்கு அருகதை இல்லை. அப்போது ஆய்வு செய்ய வேண்டிய தேவை இல்லை. இப்போதுதான் அதற்கான தேவை எழுந்துள்ளது. 2018ஆம் ஆண்டில் இடுக்கி அணை திறக்கப்பட்ட விவகாரத்தில் கேரள அமைச்சர்கள் அத்துமீறி நடந்து கொண்டபோது அதிமுக அரசு அதைத் தடுத்து நிறுத்தியது.

சுதந்திர இந்தியாவில் இன்னொரு மாநில விவகாரத்தில் இன்னொரு மாநிலம் தலையிட்டதாக வரலாறு உள்ளதா?, விதிப்படி தான் அணை திறக்கப்பட்டது என்றால், அதை முன்கூட்டியே ஏன் அறிவிக்கவில்லை?, முதலமைச்சர் இந்த விவகாரம் குறித்து ஏன் பேசவில்லை?" எனக் கேள்வியெழுப்பினார்.

மேலும் பேசிய அவர்,"மக்கள் திமுக அரசின்மீது அதிருப்தியுடன் உள்ளனர். முல்லை பெரியாறு விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகளைப் பார்த்து, இதேபோல கர்நாடகா அரசும் செயல்பட்டால், தமிழ்நாட்டின் மொத்த நீராதாரமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது என அரசை எச்சரிக்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் : அதிமுக சார்பில் போராட்டம்!

Last Updated : Nov 7, 2021, 2:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.