ETV Bharat / city

சிலை கடத்தல் வழக்கு விவகாரம்: டிஎஸ்பி காதர்பாட்சாவின் மனு தள்ளுபடி - மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை: சிலை கடத்தல் வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்யாமல் இருந்ததற்காக தன்மீது தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி டிஎஸ்பி காதர்பாட்சா தாக்கல் செய்த  மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.

உயர்நீதிமன்ற மதுரைக் கிளை
author img

By

Published : Aug 10, 2019, 4:23 AM IST

நெல்லை மாவட்டம், பழவூரில் பழமையான நாறும்பூநாதர் கோயில் உள்ளது. கடந்த 2005ஆம் ஆண்டு இந்தக் கோயிலில் இருந்த ஆனந்த நடராஜர் சிலை உள்ளிட்ட 13 பஞ்சலோக சிலைகள் காணாமல் போயின. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் விசாரித்ததில், சிலைகளை தீனதயாளன் என்பவர் மும்பையைச் சேர்ந்த ஒருவரின் உதவியோடு லண்டனுக்குக் கடத்தி, அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு விற்றது தெரியவந்தது.

ஆனால், காவல்துறையினர் தீனதயாளனைக் கைது செய்யவில்லை. வழக்கை விசாரித்த டிஎஸ்பி காதர்பாட்சா, தீனதயாளனைக் கைது செய்யாமல் இருப்பதற்காக பெருமளவு பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, இந்த வழக்கை விசாரித்த முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் தீனதயாளன், வல்லப பிரகாஷ், உள்ளிட்டோரை கைது செய்தார்.

மேலும், சிலைத் திருட்டு வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை அடையாளம் கண்டும், டிஎஸ்பி காதர் பாட்சா மறைத்ததால், அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

டிஎஸ்பி காதர்பாட்சா
டிஎஸ்பி காதர்பாட்சா

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி டிஎஸ்பி காதர் பாட்சா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அலுவலர் பொன்.மாணிக்கவேல் ஆஜரானர்.

அரசுத்தரப்பில் வாதிட்ட அவர், " வழக்கில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டும், காதர் பாட்ஷா சம்மந்தப்பட்டவர்கள் குற்றவாளிகள் இல்லை என்று மறுத்துள்ளார். எனவே தான் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது" எனக் வாதிட்டரார்.

பொன்மாணிக்கவேல்
பொன்மாணிக்கவேல்

இதையடுத்து, வழக்கை ரத்து செய்யும் காதர் பாட்ஷாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனிடையே, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஊருணிபுரத்தில் கடந்த 2008ல் கண்டெடுக்கப்பட்ட பழமையான ஆறு சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் வெளியில் விற்பனை செய்ததாகவும் அவர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி டிஎஸ்பி காதர் பாட்சா தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Intro:சிலை கடத்தல் குறித்த வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி

சிலைகடத்தல் வழக்கில் தீனதயாளன் உள்ளிட்டோரை கைது செய்யாமல் இருப்பதற்காக பெருமளவு பணம் பெற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி டிஎஸ்பி காதர்பாட்சா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.Body:சிலை கடத்தல் குறித்த வழக்கு ஒன்று உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி

சிலைகடத்தல் வழக்கில் தீனதயாளன் உள்ளிட்டோரை கைது செய்யாமல் இருப்பதற்காக பெருமளவு பணம் பெற்ற வழக்கை ரத்து செய்யக் கோரி டிஎஸ்பி காதர்பாட்சா தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.

நெல்லை மாவட்டம், பழவூரில் பழமையான நாறும்பூநாதர் கோயில் உள்ளது.

கடந்த 2005ம் ஆண்டில் இந்தக் கோயிலில் இருந்த ஆனந்த நடராஜர் சிலை உள்ளிட்ட 13 பஞ்சலோக சிலைகள் காணாமல் போயின. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் விசாரித்தனர்.

இந்த சிலைகளை சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் மும்பையைச் சேர்ந்தவர் மூலம் லண்டனுக்கு கடத்தி, அங்குள்ள அருங்காட்சியகத்திற்கு விற்றதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து வழக்கை விசாரித்த டிஎஸ்பி காதர் பாட்சா உள்ளிட்டோர், இந்த சிலைகடத்தல் வழக்கில் தீனதயாளன் உள்ளிட்டோரை கைது செய்யாமல் இருப்பதற்காக பெருமளவு பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து விசாரித்த முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல், தீனதயாளன், வல்லப பிரகாஷ், உள்ளிட்டோரை கைது செய்தார். சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசாரின் சோதனையில், சுபாஷ் கபூர், வல்லப பிரகாஷ் இடையே எழுதப்பட்ட கடிதம் கிடைத்தது.

இதையடுத்து, நாறும்பூநாதர் கோயில் சிலை திருட்டு வழக்கில் டிஎஸ்பி காதர் பாட்சா உள்ளிட்ட சில போலீசார் சேர்க்கப்பட்டனர். தொடர்ந்து டிஎஸ்பி காதர் பாட்சா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் கைதானார்.

இந்நிலையில் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி டிஎஸ்பி காதர்பாட்சா, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் ஆஜரானார். அரசுத்தரப்பில்,"பிரதான வழக்கில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டும், மனுதாரர் மறுத்துள்ளார். எனவே தான் அவர் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளார். எனவே, அவர் மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது" என வாதிட்டார்.
 
இதையடுத்து, வழக்கை ரத்து செய்யும் மனுதாரரின் மனுவை ஏற்க மறுத்த நீதிபதி அதனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
 
இதனிடையே, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஊருணிபுரத்தில் கடந்த 2008ல் கண்டெடுக்கப்பட்ட பழமையான 6 சிலைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்காமல் வெளியில் விற்பனை செய்ததாகவும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி டிஎஸ்பி காதர்பாட்சா தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஆகஸ்ட் 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.