மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் சரவணன், அக்கட்சியின் மருத்துவ அணியின் மாநில நிர்வாகியாக உள்ளார். இவர் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாகவும் இருந்தார். நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் திருப்பரங்குன்றம், மதுரை வடக்கு ஆகிய தொகுதிகளில் போட்டியிட முன்னதாக அவர் விருப்பமனு அளித்தார்.
ஆனால், மதுரை மாவட்ட திமுக கோஷ்டி பூசல் காரணமாக, திருப்பரங்குன்றம் தொகுதி, கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வலுக்கட்டாயமாக தள்ளிவிடப்பட்டது. இதனால், டாக்டர் சரணவனின் ஆதரவாளர்கள் அதிருப்தியடைந்தனர்.
இந்நிலையில் இன்று (மார்ச். 14) திமுக எம்எல்ஏ சரவணன் பாஜகவில் இணைந்தார்.
இதையும் படிங்க...காங்கிரஸ் தொகுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு