ETV Bharat / city

'சாராய பாட்டில்தான் எஞ்சாமி' - சூடமேற்றி எஞ்சாயி செய்த திமுக தொண்டர் - டாஸ்மாக் கடை முன்பு வழிாபடு செய்த திமுக தொண்டர்

டாஸ்மாக் கடை முன்பு திமுக தொண்டர் ஒருவர் சாராய பாட்டிலுக்கு சூடம் ஏற்றி கொண்டாடி மகிழ்ந்தார்.

author img

By

Published : Jun 14, 2021, 2:39 PM IST

மதுரை: கரோனா தொற்று குறைவான 27 மாவட்டங்களில் இன்றுமுதல் அரசு அறிவித்த கூடுதல் தளர்வுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அதன்படி, காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணிவரை டாஸ்மாக் கடைகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

காலை 10 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்டும் நிலையில் அதற்கு முன்பே மதுபிரியிர்கள் வரிசையில் வந்து காத்திருந்தனர். மதுபிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் செல்ல ஏதுவாக டாஸ்மாக் கடைகள் முன்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

போதை மயக்கத்தில் திமுக தொண்டர்
போதை மயக்கத்தில் திமுக தொண்டர்

மேலும் முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே மது பாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டன. அதுமட்டுமின்றி கடையின் முன்பு சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் எனக் கூறி டாஸ்மாக் ஊழியர்கள் அறிவுறுத்தினர்.

பல டாஸ்மாக் கடைகளில் பிரச்னைகள் எதுவும் ஏற்பட கூடாது என்பதற்காக காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முதல்நாளான இன்று கடையை திறக்கும் முன்பாக திமுக உறுப்பினர் ஒருவர் கடைக்கு சூடம் ஏற்றி பூ தூவி வழிபட்டார்.

சாராய பாட்டிலுக்கு சூடமேற்றிய நபர்
சாராய பாட்டிலுக்கு சூடமேற்றிய நபர்

பின் மதுபாட்டிலை வாங்கி அதற்கு முன்பாக தரையில் விழுந்து கும்பிட்டார். தொடர்ந்து ஏராளமான தொழிலாளர்களும், இளைஞர்களும் காத்திருந்து மதுவை வாங்கிச் சென்றனர். கரோனா பரவல் இன்னும் தீவிரமாக உள்ள நிலையில் தற்போது மதுபானக் கடைகள் திறக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: 'மதுக்கடைகளை திறக்காவிட்டால் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும்' - ப.சிதம்பரம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.