ETV Bharat / city

தென் மாவட்டத்தினருக்கு தென்னக ரயில்வேயின் தீபாவளி பரிசு! - நாகர்கோவில்

தீபாவளி பண்டிகைக்குத் தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் தடையின்றி தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்ல மூன்று சிறப்பு ரயில்களை இயக்க இருப்பதாகத் தென்னக ரயில்வே ரயில்வே அறிவித்துள்ளது.

தென்னக ரயில்வேயின் தீபாவளி பரிசு, தென்னக ரயில்வே, southern railway
தென்னக ரயில்வேயின் தீபாவளி பரிசு
author img

By

Published : Nov 2, 2021, 10:07 AM IST

சென்னை: தென்னக ரயில்வே மதுரை கோட்டம் நேற்று (நவ. 1) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்களுக்கு மூன்று சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

சென்னை எழும்பூர் - நாகர்கோவில், கோவில்பட்டி வழியாகத் திருநெல்வேலி - தாம்பரம், தென்காசி வழியாகத் தாம்பரம் - திருநெல்வேலி ஆகிய சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கின்றன.

சென்னை - நாகர்கோவில்

சென்னை எழும்பூர் - நாகர்கோவில் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06037) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 3ஆம் தேதி அன்று இரவு 10.05 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11.00 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - சென்னை எழும்பூர் விரைவு சிறப்பு ரயில் (வண்டி எண் 06038) நாகர்கோவிலிலிருந்து நவம்பர் 5ஆம் தேதி மாலை 03.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் (நவ.6) அதிகாலை 05.20 மணிக்குச் சென்னை எழும்பூர் சென்றடையும்.

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். நாகர்கோவில் - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மாம்பலம் ரயில் நிலையத்திலும், சென்னை எழும்பூர் நாகர்கோவில் சிறப்பு ரயில் அரியலூர் ரயில் நிலையத்திலும் நின்று செல்லும்.

தென்காசி மார்க்கம்

திருநெல்வேலி - தாம்பரம் சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண் 06040) நவம்பர் 7ஆம் தேதி திருநெல்வேலியிலிருந்து இரவு 07.00 மணிக்குப் புறப்பட்டு தென்காசி, ராஜபாளையம், விருதுநகர், மதுரை வழியாகச் சென்று மறுநாள் (நவ.8) காலை 7.55 மணிக்குத் தாம்பரம் சென்று சேரும்.

இந்த ரயில் அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்றுசெல்லும்.

கோவில்பட்டி மார்க்கம்

தாம்பரம் - திருநெல்வேலி சிறப்புக் கட்டண சிறப்பு ரயில் (வண்டி எண் 06049) தாம்பரத்திலிருந்து நவம்பர் 8ஆம் தேதி மாலை 4 மணிக்குப் புறப்பட்டு மதுரை, கோவில்பட்டி வழியாகச் சென்று மறுநாள் (நவ. 9) அதிகாலை 3 மணிக்குத் திருநெல்வேலி சென்றடையும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ரயில்களின் முன்பதிவு இன்று (நவ. 02) காலை 8 மணிக்குத் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தீபாவளி ஸ்பெஷல் 'அண்ணாத்த சேலைகள்' - விற்பனை ஜோர்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.