மதுரை மாநகர் சத்யசாய் நகரிலுள்ள சாய்பாபா கோயிலில் நடைபெறும் விழாக்களில் பங்கேற்க ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் இன்றுமுதல் (ஜூலை 22) 26ஆம் தேதிவரை மதுரையில் தங்கவுள்ளார்.
பணி நீக்கம்
இதனையடுத்து மதுரை மாநகராட்சி மண்டலம் நான்கில் உதவி ஆணையராக பணியாற்றும் சண்முகம், சத்யசாய் நகர் பகுதி சாலைகளை சீர் அமைத்தல், விளக்கு கம்பங்களை பழுதுபார்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியிருந்தார்.
அரசு அலுவல் சாராத ஆர்எஸ்எஸ் தலைவருக்காக மாநகராட்சியின் இந்தப் பணிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் ட்விட்டர் பக்கத்தில் 'அரசின் எந்த விதிகளின்படி மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் இந்த சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார்' என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் உதவி ஆணையாளர் சண்முகத்தை பணியிலிருந்து விடுவித்து மதுரை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'ஆர்எஸ்எஸ் தலைவர் வருகைக்கு மதுரை மாநகராட்சி சார்பில் ஏற்பாடு? - மாநகராட்சி சுற்றறிக்கையால் சர்ச்சை'