திண்டுக்கல் மாவட்டம் குரும்பட்டி கிராமத்தில் 13 வயது சிறுமி கடந்தாண்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டார். இது தொடர்பாக கிருபாநந்தன் என்பவர் கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், விசாரணையின் முடிவில் கிருபாநந்தன் விடுதலைசெய்யப்பட்டார்.
இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கைவைத்திருந்தனர்.
இதையடுத்து, தமிழ்நாடு அரசு சார்பாக இவ்வழக்கில் இன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில், நீதிபதிகள் கல்யாணசுந்தரம், கிருஷ்ணவள்ளி ஆகியோர் அமர்வில், மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன் மேல்முறையீடு செய்தார்.
மனு குறித்து மகளிர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட கிருபாநந்தன் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: பணம் பறிக்கும் லெட்டர் பேட் கட்சிகள் - நீதிபதிகள் கண்டனம்