திண்டுக்கல் மாவட்டம் முத்தனம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரி தாளாளர் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மாணவிகள் தாடிக்கொம்பு போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து தாளாளர் திருவண்ணாமலை மாவட்டம், போளூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இந்த வழக்கு கீழமை நீதிமன்றத்தில் நடந்துவந்தது.
அப்போது தாளாளருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த ஜாமீனை எதிர்த்து, அரசுத் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனிடையே வழக்கில் தங்களை மனுதாரர்களாக சேர்க்கக்கோரி, அகில இந்திய பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை நேற்று விசாரித்த நீதிபதி முரளி சங்கர், தாளாளர் ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது. மூன்று நாள்களில் சரணடைய வேண்டும். தவறினால் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு ஐஏஎஸ் பதவி உயர்வு வழங்க கோரி மனு