ETV Bharat / city

திண்டுக்கல்லில் விண்வெளிக் கண்காட்சி - விண்வெளிக் கண்காட்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் ஓட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் விண்வெளி கண்காட்சி நடக்கிறது.

ISRO
author img

By

Published : Oct 18, 2019, 11:52 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிறிஸ்தவ பொறியியல் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து கல்லூரி வளாகத்தில் விண்வெளி யுத்திகள் என்ற விண்வெளி கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை தொடங்கி நாளை சனிக்கிழமை வரை இரண்டு தினங்கள் நடைபெற்றுவருகிறது.

இந்தக் கண்காட்சியில் இஸ்ரோவின் முதன்மை விஞ்ஞானிகள் கண்ணு, அனுமியா, பிளாட்டோ, கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கண்காட்சியை பழனி சார் ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

இந்தக் கண்காட்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் படைப்புகள், அதன் உதிரி பாகங்கள், ராக்கெட், ராக்கெட் ஏவுதல் பற்றிய முழுமையான காணொலிக் காட்சிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன.

இந்தக் கண்காட்சியில் திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களிலிருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர், 50-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர் பார்வையிட்டு வருகின்றனர்.

இன்று மட்டும் சுமார் 12 ஆயிரம் மாணவ மாணவியர் பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து இந்தக் கண்காட்சி நாளையும் நடைபெறுவதால் பல கல்லூரி, பள்ளிகளின் மாணவர்கள் நாளை பார்வையிட தயாராகின்றனர்.

இஸ்ரோ விஞ்ஞானி கண்ணு பேட்டி

இந்தக் கண்காட்சி முதன்முதலாக இந்த மாவட்டத்தில் நடைபெறுவதால் மாணவ மாணவியர் ஆர்வமுடன் கலந்துகொண்டு பார்வையிட்டுவருகின்றனர். இந்தக் கண்காட்சி மாணவர்களிடையே இஸ்ரோ விண்வெளி விதிகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு, அறிவுத்திறன் வளர்த்துக் கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் எனக் கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவியர், ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிக்க: 'இஸ்ரோவின் அடுத்த திட்டம் ககன்யான்’ - இஸ்ரோ இணை இயக்குநர் ரெங்கநாதன்

Intro:
திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக ஒட்டன்சத்திரம் தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து நடத்தும் மாபெரும் விண்வெளி கண்காட்சி நடைபெற்று வருகிறது

Body:திண்டுக்கல். 18.09.19
பதிலி செய்தியாளர் எம்.பூபதி

திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக ஒட்டன்சத்திரம் தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து நடத்தும் மாபெரும் விண்வெளி கண்காட்சி நடைபெற்று வருகிறது

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் கிறிஸ்துவ பொறியியல் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து கல்லூரி வளாகத்தில் விண்வெளி யுத்திகள் என்ற விண்வெளி கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை துவங்கி நாளை சனிக்கிழமை வரை இரண்டு தினங்கள் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியில் இஸ்ரோவின் முதன்மை விஞ்ஞானிகள் கண்ணு, அனுமியா, பிளாட்டோ ஆகிய மூன்று பேர் கலந்து கொண்டனர். மேலும் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கண்காட்சியை பழனி சார் ஆட்சியர் துவக்கி வைத்தார். இந்த கண்காட்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகளின் இஸ்ரோவின் படைப்புகள், அதன் உதிரி பாகங்கள், ராக்கெட் மற்றும் ராக்கெட் ஏவுதல் பற்றிய முழுமையான காணொளி காட்சிகள் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. இந்த கண்காட்சியில் திண்டுக்கல், மதுரை, தேனி, கரூர், நாமக்கல், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் இருந்து சுமார் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவியர்கள் பார்வையிட்டு வருகின்றனர். இன்று மட்டும் சுமார் 12 ஆயிரம் மாணவ மாணவியர்கள் பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து இந்த கண்காட்சி நாளையும் நடைபெறுவதால் பல கல்லூரி மற்றும் பள்ளிகள் நாளை பார்வையிட தயாராகின்றனர். இந்த கண்காட்சி முதன்முதலாக இந்த மாவட்டத்தில் நடைபெறுவதால் மாணவ மாணவியர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பார்வையிட்டு வருகின்றனர். இந்த கண்காட்சி மாணவர்களிடையே இஸ்ரோ விண்வெளி விதிகளைப் பற்றிய ஒரு விழிப்புணர்வு மற்றும் அறிவுத்திறன் வளர்த்துக் கொள்வதற்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என கண்காட்சியில் கலந்துகொண்ட மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

பேட்டி:- கண்ணு - முதன்மை விஞ்ஞானி இஸ்ரோ.Conclusion:திண்டுக்கல் மாவட்டத்தில் முதன்முறையாக ஒட்டன்சத்திரம் தனியார் பொறியியல் கல்லூரி மற்றும் இஸ்ரோ இணைந்து நடத்தும் மாபெரும் விண்வெளி கண்காட்சி நடைபெற்று வருகிறது.

குறித்த செய்தி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.