ETV Bharat / city

திண்டுக்கல் - மயிலாடுதுறை, திருநெல்வேலி - ஈரோடு ரயில்கள் ஜூலை 11 முதல் இயக்கம் - திண்டுக்கல் மயிலாடுதுறை திருநெல்வேலி ஈரோடு

திண்டுக்கல் - மயிலாடுதுறை மற்றும் திருநெல்வேலி - ஈரோடு ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சேவையை மீண்டும் தொடங்க ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு ரயில்கள் ஜூலை 11 முதல் இயக்கம்
ஈரோடு ரயில்கள் ஜூலை 11 முதல் இயக்கம்
author img

By

Published : Jun 26, 2022, 9:44 PM IST

மதுரை: தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மயிலாடுதுறை - திண்டுக்கல் முன்பதிவு இல்லாத விரைவு ரயில் (16847) ஜூலை 11 முதல் மயிலாடுதுறையிலிருந்து காலை 11.25 மணிக்கு புறப்பட்டு மாலை 04.00 மணிக்கு திண்டுக்கல் வந்து சேரும்.

மறுமார்க்கத்தில் திண்டுக்கல் - மயிலாடுதுறை முன்பதிவில்லாத விரைவு ரயில் (16848) திண்டுக்கல்லில் இருந்து ஜூலை 12 முதல் காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 04.00 மணிக்கு மயிலாடுதுறை சென்று சேரும்.

இந்த ரயில்கள் குத்தாலம், ஆடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், பூதலூர், திருவெறும்பூர், மஞ்சத்திடல், திருச்சி, மணப்பாறை, வையம்பட்டி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.

ஈரோடு - திருநெல்வேலி முன்பதிவு இல்லாத விரைவு ரயில் (16846) ஈரோட்டில் இருந்து ஜூலை 11 முதல் மதியம் 01.35 மணிக்கு புறப்பட்டு இரவு 09.45 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும்.

மறுமார்க்கத்தில் திருநெல்வேலி - ஈரோடு முன்பதிவில்லாத விரைவு ரயில் திருநெல்வேலியிலிருந்து ஜூலை 13 முதல் காலை 06.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 02.30 மணிக்கு ஈரோடு சென்று சேரும்.

இந்த ரயில்கள் கொடுமுடி, புகலூர், கரூர், வெள்ளியணை, எரியோடு, திண்டுக்கல், அம்பாத்துரை, கொடைக்கானல் ரோடு, சோழவந்தான், மதுரை, திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், துலுக்கப்பட்டி, சாத்தூர், கோவில்பட்டி, கடம்பூர், வாஞ்சி மணியாச்சி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என அதில் கூறப்பட்டுள்ளது

இதையும் படிங்க: கோவையில் அதிமுக பொதுக்குழு கூட்டம்?

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.