ETV Bharat / city

கணவரின் ஆட்டோவில் வாக்கு சேகரித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!

மதுரை: திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாயி தனது கணவரின் ஆட்டோவில் பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தார்.

கணவரின் ஆட்டோவில் வாக்கு சேகரித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!
கணவரின் ஆட்டோவில் வாக்கு சேகரித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!
author img

By

Published : Mar 17, 2021, 11:35 AM IST

வருகிற ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகின்ற தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திருப்பரங்குன்றம் தொகுதி, திமுக கூட்டணியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அக்கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பொன்னுத்தாயி தன்னுடைய கணவருக்கு சொந்தமான ஆட்டோவில் ஏறி இன்று (மார்ச் 17) திருப்பரங்குன்றம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார்.

திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாயை அறிமுகப்படுத்திய மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினர் சு. வெங்கடேசன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மதுரையின் பிரதான நுழைவு வாயில் திருப்பரங்குன்றம். இங்கு மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையம், வடபழஞ்சி தகவல் தொழில்நுட்ப பூங்கா, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட வேண்டும். அப்படி அமைத்தால் மதுரை மட்டுமல்ல தென் தமிழகமே முன்னேறும்.

இங்கு 10 ஆண்டுகளாக மக்கள் பணியாற்றிய நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் மோகன் மதுரை திருப்பரங்குன்றம் பகுதியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி அமைக்கவும். வடபழஞ்சி தொழில்நுட்ப பூங்கா அமைக்கவும் மிகப்பெரும் முயற்சி மேற்கொண்டார்.

மதுரை மக்களவை உறுப்பினரான நான் இருக்கின்ற காரணத்தால் திருப்பரங்குன்றம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக பொன்னுத்தாயி தேர்ந்தெடுக்கப்படும்பட்சத்தில் நிச்சயமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதியில் வளர்ச்சிக்கு தேவையான பணிகளை செயல்படுத்தியுள்ளார்” என்றார்.

கணவரின் ஆட்டோவில் வாக்கு சேகரித்த கம்யூனிஸ்ட் வேட்பாளர்!

பின்னர் பேசிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளர் பொன்னுத்தாயி, “1957ஆம் ஆண்டு கேபி ஜானகி அம்மாள் வேட்பாளராக களம் நின்ற திருப்பரங்குன்றம் தொகுதியில் 54 ஆண்டுகளுக்கு பின் பெண் வேட்பாளராக திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிடுகிறேன்.

மக்கள் பணியில் சங்கரய்யா, மோகன், நன்மாறன் போன்றவர்களுக்கு அடுத்து தற்போது மக்களவைத் தொகுதி உறுப்பினராக உள்ள வெங்கடேசன் மக்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார். திருப்பரங்குன்றம் கோயிலை சுற்றுலா தலமாகவும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றவும். அவனியாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமாக செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்றவும் திமுக மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் எங்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டுகிறேன்” என்றார்.

இதையும் படிங்க...18 வயதை எட்டிய முதல் வாக்காளர்களின் வாக்கு எந்த கட்சிக்கு? - ஈடிவி பாரத் கள ஆய்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.