ETV Bharat / city

விலங்குகள் கொன்று புதைப்பு - அரசுகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டிலுள்ள காடுகளில் விலங்குகளை கொன்று கடத்துவது குறித்து சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க கோரிய வழக்கு குறித்து மத்திய, மாநில அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீதிமன்ற செய்திகள்
நீதிமன்ற செய்திகள்
author img

By

Published : Aug 2, 2021, 6:34 PM IST

மதுரை: திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த நித்திய சௌமியா உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றினைத் தாக்கல் செய்திருந்தார்.

அதில், "தமிழ்நாடு வனப் பகுதிகளில் வாழும் உயிரினங்களின் பல், தந்தம், ஒடு போன்றவைகளுக்காக, அவைகளை வேட்டையாடுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தான் உலகிலேயே, சட்ட விரோதமாக விலங்குகளின் விலையுயர்ந்த உடல் பாகங்கள் மற்றும் உறுப்புகளுக்காக நடைபெறும் கடத்தல்கள் அதிகமாக நடைபெறுகிறது.

இதற்கு இந்தியாவில் சட்டங்கள் கடுமையாக இல்லாததே காரணம். மேலும், காடுகளில் உள்ள அரிய வகை மரங்களான சந்தனம், தேக்கு போன்றவைவும் சட்டவிரோதமாக கடத்தப்படுகிறது. காடுகளின் உள்ளே கஞ்சா செடிகள் வளர்த்து கடத்தப்படுவதும் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

நீட் ஆள்மாறாட்டம்: சென்னை மருத்துவ மாணவன் கைது

குறிப்பாக 2021 ஜனவரி 5ஆம் தேதி 5.75 கிலோ எடையுள்ள எறும்பு தின்னி ஓடுகள், 6 சிறுத்தை நகங்கள், 6 கிலோ எடையுள்ள 2 யானையின் தந்தங்கள் ஆகியவை வனத்துறையினரால் கைப்பற்றப்பட்டன.

அதேபோல் 2020 மே 20ஆம் தேதி கொடைக்கானல் காடுகளில் 1 கிலோ கஞ்சா வளர்க்கப்பட்டதை வனத்துறையினர் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வழக்கை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க உத்தரவிட வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கு குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.