மதுரை: தென்மாவட்டத்தின் மிகப்பெரிய மருத்துவமனையான மதுரை அரசு ராசாசி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு சிகிச்சை பிரிவில், மதுரை மட்டுமின்றி தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கரோனா இரண்டாம் அலை பாதிப்பு தீவிரம் அடைந்துள்ள நிலையில், தனியார் மருத்துவமனைகள் பிரசவத்திற்கு சிகிச்சையளிக்க மறுப்பதால் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அதிகளவில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், மதுரை கரோனா சிறப்பு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஐம்பது படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது.
இந்த சிறப்பு வார்டில் இன்று (ஜூன் 7) மட்டும் தொற்றால் பாதிக்கப்பட்ட 37 கர்ப்பிணி பெண்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்ப்பிணித் தாய்மார்களை கண்காணித்து சிறப்பு சிகிச்சை அளிக்கும் வகையில் தனி வார்டு, தனி மருத்துவ குழு ஆகியவை நியமிக்கப்பட்டு, தொடர்ந்து கண்கணிக்கபட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா முதல் அலையின் போது மதுரை அரசு மருத்துவமனையில் தொற்று பாதிக்கப்பட்ட 266 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: அரசு வழக்கறிஞர் நல்ல தகுதி உடையவராக இருக்க வேண்டும் - நீதிபதிகள் கருத்து