ETV Bharat / city

கஷ்டப்படுகிற யாருக்கும் பலன் கிடைக்காமல் போகாது... தேசிய அணியில் தேர்வான ஏழை மாணவியின் ஊக்கமளிக்கும் கதை... - national team

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பயிலும் மாணவி வர்ஷினி தனது கடின உழைப்பால் தேசிய வாலிபால் அணியில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு ஏழ்மை குடும்பத்தில் பிறந்து, ஸ்காலர்ஷிப்பில் படித்து சாதித்துகாட்டிய இந்த மாணவியின் சிறப்புத்தொகுப்பை காணலாம்.

வாலிபால் வீராங்கனைகள்
வாலிபால் வீராங்கனைகள்
author img

By

Published : Jun 25, 2022, 7:05 PM IST

Updated : Jun 27, 2022, 4:48 PM IST

மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகே அமைந்துள்ளது தெற்குத் தெரு கிராமம். இதனைப் பூர்வீகமாகக் கொண்ட மாணவி வர்ஷினி சிறுவயது முதலே விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.

இதன் காரணமாக நாகர்கோவிலில் உள்ள விளையாட்டு விடுதியில் தங்கி பள்ளிப் படிப்பை மேற்கொண்டார். பள்ளிப் பருவத்திலிருந்தே வாலிபால் விளையாட்டில் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகளை குவித்துவந்தார்.

வாலிபால் வீராங்கனைகள்
வாலிபால் வீராங்கனைகள்

இதையடுத்து மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளம் வணிகவியல் படிப்பில் சேர்ந்தார். இந்த கல்லூரியிலும் வாலிபால் போட்டிகளில் கலந்துகொள்வதை தொடர்ந்தார். இதனிடையே பெங்களூருவிலுள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மூலம் தேசிய அணியில் விளையாடத் தேர்வாகினார்.

அனைத்து கட்டணத்தையும் கல்லூரியே ஏற்கும்: இதுகுறித்து அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் கூறுகையில், 'நூறாண்டுகள் பழமை வாய்ந்த அமெரிக்கன் கல்லூரி படிப்பிற்கு மட்டுமன்றி விளையாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. அதிலொருவராக வர்ஷினி தன்னை நிலைநிறுத்திக்கொண்டார்.

கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர்
கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர்

இந்திய அணியில் நாட்டுக்காக அவர் விளையாட இருப்பது மதுரைக்கு மட்டுமன்றி, தமிழ்நாட்டிற்கே பெருமை. விளையாட்டில் சாதிக்கும் மாணவ, மாணவியருக்கு அவர்கள் விரும்பும் படிப்பை வழங்கி, இலவச உணவு, தங்குமிட வசதி செய்து கொடுப்பதுடன் முழு கல்விக் கட்டணத்தையும் கல்லூரி நிர்வாகமே ஏற்றுக் கொள்கிறது.

இதன் பலனாய்த்தான் வர்ஷினியின் சாதனை நிகழ்ந்துள்ளது. காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி, விளையாட்டு, வகுப்பு. மீண்டும் உடற்பயிற்சி, விளையாட்டு, வகுப்பு என ஓடிக் கொண்டிருக்கும் வர்ஷினி வாலிபால் விளையாட்டை தனது சுவாசமாகவே கருதுகிறார்.

தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை தேடித் தர வேண்டும் என்ற அவரது இடைவிடாத முயற்சியின் விளைவாய் இந்திய வாலிபால் அணியில் 'லிபரோ' நிலை வீரராக உயர்ந்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

ஓரிரு மாதங்களில் பயிற்சி: இதையடுத்து அமெரிக்கன் கல்லூரியின் உடற்கல்விக் துறைத் தலைவரும் பேராசிரியருமான முனைவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், 'இந்தாண்டு அமெரிக்கன் கல்லூரியின் விளையாட்டுத் துறைக்கு மிகச் சிறந்த ஆண்டாக அமைந்துள்ளது. வர்ஷினிக்கு ஓரிரு மாதங்கள் பெங்களூருவில் பயிற்சி நடக்கும். இதன் பிறகு, தேசிய அணி சார்பாக நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கேற்பார்' என்றார்.

வாலிபால் அணியின் பயிற்சியாளர் தீபன்ராஜ்
வாலிபால் அணியின் பயிற்சியாளர் தீபன்ராஜ்

தொடர்ந்து அமெரிக்கன் கல்லூரி பெண்கள் வாலிபால் அணியின் பயிற்சியாளர் தீபன்ராஜ் கூறுகையில், 'இந்தாண்டுதான் முதன் முதலாக வாலிபால் அணியை அமெரிக்கன் கல்லூரியில் தொடங்கினோம். முதல் முயற்சியிலேயே இத்தனை பெரிய வெற்றியைப் பெற முடிந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது.

முதல் முயற்சியிலேயே வெற்றி: பெங்களூருவிலுள்ள 'SAI' (ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா) மையத்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணித் தேர்வில் 'லிபரோ' நிலை வீராங்கனையாக வர்ஷினி தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஒரு கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவி இந்திய வாலிபால் அணிக்காக முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்திய அளவில் தேர்வு பெறுவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. பல்வேறு மாநிலங்களில் ஆதிக்கம் நிறைந்துள்ள இந்த விளையாட்டில் வர்ஷினியின் சாதனை மதிப்பும் தனித்துவமும் வாய்ந்தது' என்றார்.

வர்ஷினிக்கு அக்கா, தங்கை, தம்பி உள்ளனர். தன்னைப் போலவே தனது தங்கையையும் உருவாக்க வேண்டும் என்று நோக்குடன் அவருக்கும் தேவையான அறிவுரைகளையும், பயிற்சிகளையும் அளித்துவருகிறார். தான் பிறந்த ஊருக்கும், பயிலும் அமெரிக்கன் கல்லூரிக்கும் பெருமை தேடித் தர வேண்டும் என்ற லட்சியம் அவருக்குள் தீராத தாகமாக உள்ளது.

கஷ்டப்படுகிற யாருக்கும் பலன் கிடைக்காமல் போகாது: தன்னுடைய இந்தப் பயணம் குறித்து வர்ஷினி கூறுகையில், "பள்ளியில் படிக்கும்போதே தேசிய அளவிலான வாலிபால் போட்டிகளில் பங்கெடுத்துள்ளேன். மதுரையிலுள்ள சாம்பியன்ஸ் வாலிபால் அகாடெமி என்ற அமைப்பின் மூலமாகத்தான் அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலை வணிகவியல் பிரிவு கிடைத்தது. கல்லூரி வழங்கும் சலுகைதான் எனது பயிற்சிக்கும் வெற்றிக்கும் முக்கியக் காரணம்.

மாணவி வர்ஷினி
மாணவி வர்ஷினி

எனக்கு கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர், உடற்கல்வித்துறை தலைவர் பாலகிருஷ்ணன், பயிற்சியாளர் தீபன்ராஜ் மூவருமே உறுதுணையாக இருக்கின்றனர். 'கஷ்டப்படுகின்ற யாருக்கும் பலன் கிடைக்காமல் போகாது. என்னைப் போன்றே நிறைய மாணவ, மாணவியர் கடும் முயற்சியெடுத்து வருகின்றனர்.

இதுபோன்ற கனவுகளோடு நிறைய பேர் இருக்கின்றனர். ஆனால், மனதில் உறுதியோடும் தன்னம்பிக்கையோடும் நாம் பயிற்சி மேற்கொண்டால் சாதிக்க இயலும். இதைவிட பெரிய உயரத்தையும் எட்ட முடியும். நமக்கான இடத்தை நாம் தேர்வு செய்ய வேண்டியது அவசியம்" என்றார்.

கஷ்டப்படுகிற யாருக்கும் பலன் கிடைக்காமல் போகாது... தேசிய அணியில் தேர்வான ஏழை மாணவியின் ஊக்கமளிக்கும் கதை...

இதையும் படிங்க: 'தமிழர்கள் மொழிக்காக போராடுவர்கள்' - அமெரிக்காவில் தலைமை நீதிபதி பேச்சு

Last Updated : Jun 27, 2022, 4:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.