ETV Bharat / city

நீண்ட நாள் கோரிக்கையை ஸ்டாலின் தீர்த்துவைப்பார் - பாப்பாபட்டி மக்கள் நம்பிக்கை - முதலமைச்சர் ஸ்டாலின்

முதலமைச்சரை ஆர்வத்தோடு வரவேற்க பாப்பாபட்டி கிராம மக்கள் காத்திருக்கின்றனர். தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

பாப்பாபட்டி மக்களின் எதிர்பார்ப்பு
பாப்பாபட்டி மக்களின் எதிர்பார்ப்பு
author img

By

Published : Oct 1, 2021, 3:53 PM IST

மதுரை: அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டத்தில் மதுரை மாவட்டம் பாப்பாபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கவுள்ளார். மதுரையிலிருந்து சற்றேறக்குறைய 35 கி.மீ. தொலைவில் உசிலம்பட்டி தாலுகாவில் அமைந்துள்ளது பாப்பாபட்டி.

இன்று அமைதியாக இருக்கும் இந்தக் கிராமம்தான் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டையே உலுக்கியது என்றால், யாராலும் நம்ப முடியாதுதான்.

பொதுவாகவே உசிலம்பட்டி தாலுகா பல்வேறு சாதி சச்சரவுகளுக்குப் பெயர் பெற்றதாக ஒருகாலத்தில் இருந்தது. இன்றைக்கு கொஞ்சம் கொஞ்சமாய் அமைதியான நல்லிணக்கப்பாதைக்கு திரும்பத் தொடங்கியிருப்பதற்கு பாப்பாபட்டி கிராமமும் ஒரு காரணம்தான்.

உள்ளாட்சித் தேர்தலில் தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்ட பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் ஆகிய கிராமங்களில் பட்டியலின மக்கள் தலைவர்களாக நீடிக்க முடியாத துரதிருஷ்டநிலை ஒரு காலத்தில் இருந்தது. இதன் காரணமாக ஆட்சியாளர்களுக்கு இங்கு தேர்தல் நடத்துவது என்பது மிக மிக சவாலான காரியமாகவே இருந்தது.

நடத்திகாட்டிய உதயச்சந்திரன்

தேர்தல் நடக்கும், ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின வேட்பாளர் பதவி விலகிவிடுவார். இப்படியே நீடித்த இந்த அவலத்திற்கு கிராம மக்களின் ஒத்துழைப்போடு சமரசம் காண முயன்றவர் அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியரும், தமிழ்நாடு முதலமைச்சரின் இன்றைய தனிச் செயலருமான உதயச்சந்திரன்.

நடைபெறவே வாய்ப்பில்லை என்ற சூழலை மாற்றி மேற்காணும் மூன்று ஊராட்சிகளிலும் 2006ஆம் ஆண்டு தேர்தல் நடத்தி சாதனை படைத்தவர் உதயச்சந்திரன் என்றால், அப்போது உதயச்சந்திரனின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்து உற்சாகப்படுத்தியவர் அன்றைய உள்ளாட்சித் துறை அமைச்சர்.

ஸ்டாலினுக்கு பாப்பாபட்டிக்குமான தொடர்பு

அவர் யாரென்றுதானே கேட்கிறீர்கள்? இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் அவர். தற்போது தமிழ்நாட்டிலுள்ள ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தான் பங்கேற்கவிருக்கும் கிராம சபைக் கூட்டத்தை அக்டோபர் 2ஆம் தேதி மதுரை மாவட்டம் பாப்பாபட்டியில் மு.க. ஸ்டாலின் நடத்துவதற்கு மேற்கண்ட நிகழ்வுகள்தான் முக்கியக் காரணம்.

cm mk stalin to visit madurai pappapatti
பாப்பாபட்டி கிராமம்

முதலமைச்சர் பங்கேற்கவிருக்கும் கிராம சபைக் கூட்டம் என்பதால், பாப்பாபட்டி கிராமத்தில் ஒட்டுமொத்த அரசு இயந்திரங்களும் தற்போது சுறுசுறுப்புடன் களத்தில் இறங்கி சுழன்றுகொண்டிருக்கின்றன.

இந்நிலையில் ஈடிவி பாரத் ஊடகத்திற்காக பாப்பாபட்டி சென்று அங்குள்ள மக்களோடு உரையாடினோம். தமிழ்நாடு முதலமைச்சரை வரவேற்க ஒட்டுமொத்த கிராமமே ஆவலுடன் காத்திருப்பது தெரிந்தது. அத்துடன் முதலமைச்சரிடம் தங்களின் நீண்டநாள் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

உசிலம்பட்டியின் பல்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கு வித்திட்ட ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மூத்தத் தலைவரும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் உற்ற தொண்டருமான மூக்கையாத்தேவர் பிறந்த ஊர்தான் பாப்பாபட்டி. அவரது நினைவைப் போற்றும் வகையில் பாப்பாபட்டி ஊர் மந்தையில் கம்பீரமாக மூக்கையாத்தேவர் சிலை நிற்கிறது.

நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்

சீர்மரபினர் நலச்சங்கத்தின் மாநிலப் பொருளாளராக உள்ள தவமணிதேவி கூறுகையில், "மு.க. ஸ்டாலின் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது, உசிலம்பட்டி பகுதியில் பெரும்பான்மையாக வாழும் கள்ளர் சமூகத்திற்குப் பட்டியலின பழங்குடிகள் என்ற ஒற்றைச் சான்றிதழ் வழங்குவதாக உறுதியளித்தார்.

அதுதான் எங்களின் முதன்மை கோரிக்கை. அவர் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது மேலும் வாக்குறுதிகளை அளித்திருந்தார். அதையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்" என்றார்.

பாப்பாபட்டி ஊரின் வடபுறம் அமைந்துள்ள ஒச்சாண்டம்மன் கோயில் வளாகத்தில் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் கிராம சபைக் கூட்டம் நடைபெறுவதால், அவ்வளாகத்தைச் சுத்தம் செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகின்றன. கடந்த காலத்தில் இருந்த எந்தவிதமான சமூகப் பிணக்குகளும் இன்றி கிராம நிர்வாகம் இயங்கிவருவதாகப் பெரும்பாலானோர் கருத்துத் தெரிவித்தனர்.

அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் ஆதிசேடன் கூறுகையில், "கடந்த தேர்தல் பரப்புரையின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மிகவும் பின்தங்கிய பகுதி என்பதால், வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய தொழிற்பேட்டை அமைக்கப்பட வேண்டும். திருமங்கலம் பிரதான கால்வாயிலிருந்து பாப்பாபட்டிக்கு தனிக் கால்வாய் அமைக்கப்பட வேண்டும்.

முதலமைச்சர் வந்தால்தான் இதெல்லாம் நடக்குமா

58 கால்வாய்த் திட்டத்திற்கு நிரந்தர அரசாணை பெற்றுத் தர வேண்டும். திமுக ஆட்சி அமைவதற்கு உறுதுணையாக இருந்த மூக்கையாத்தேவர் பெயரில் இந்தப் பகுதியில் சட்டக்கல்லூரி அமைவதை உறுதிப்படுத்த வேண்டும். அதே போன்று பெரிய நீர்நிலை தேக்கத்தொட்டி ஒன்றையும் அமைத்துத்தர கோரிக்கைவிடுக்கின்றோம்" என்றார்.

பாப்பாபட்டி மக்களின் எதிர்பார்ப்பு

தமிழ்நாட்டின் முதலமைச்சர் வருகிறார் என்றவுடன் மதுரை மாவட்டம் செக்காணூரணியிலிருந்து வாலாந்தூர், சொக்கதேவன்பட்டி, நாட்டாபட்டி, சடச்சிபட்டி, பசுக்காரன்பட்டி என அனைத்துக் கிராமங்களிலும் சாலை சீரமைப்புப் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

முதலமைச்சர் வந்தால்தான் இதெல்லாம் எங்களுக்குக் கிடைக்குமா என்ற முணுமுணுப்பும் மக்களிடையே இருந்ததைக் காண முடிகிறது. எப்படியோ உசிலம்பட்டி தாலுகா மக்களுக்கு நன்மை கிடைத்தால் சரிதான்.

இதையும் படிங்க: வாகனத்திற்கான ஆவணங்கள் செல்லுபடியாகும் காலம் அக்., 31 வரை நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.