ETV Bharat / city

உயிரிழப்பு பதிவில் பழைய விதியை மாற்ற முதலமைச்சரின் தலையீடு தேவை!

author img

By

Published : May 30, 2021, 1:26 PM IST

சென்னை: உயிரிழப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் பதிய தவறினால் அபராதம் செலுத்த வேண்டும் என்னும் பழைய விதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு மாற்ற வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

Su Venkatesan MP
Su Venkatesan MP

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "கரோனா பேரிடர் காலத்தில் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அரசு அலுவலகங்களோ மிகக்குறைந்த ஊழியர்களோடு இயங்கி வருகிறது. உயிரிழந்தவர்களின் விவரங்களை பதிய உறவினர்கள் படாதபாடு படுகிறார்கள்.

அபாராதத் தொகையைவிடக் கொடியது மண்டல அலுவலகத்துக்கும், வார்டு அலுவலகத்துக்குமான அலைச்சல். உயிரிழப்புகளை சந்தித்துள்ள வீடுகளில் உலராத கண்ணீரோடு உறவினர்கள் தேங்கிக் கிடக்கின்றனர். அவர்களை அழுத கண்ணீரோடு அலையவிட வேண்டாம்.

எனவே உயிரிழப்பு நிகழ்ந்த 21 நாட்களுக்குள் பதிய வேண்டும். அப்படி பதிய தவறினால் அபராதம் செலுத்த வேண்டும் என்னும், பழைய விதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு மாற்ற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: மீண்டும் விதிகளை மீறி இந்தியில் கடிதம் அனுப்பும் அமைச்சகங்கள்- எம்பி கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.