ETV Bharat / city

தமிழ் மொழி கட்டாயம்: வழக்கைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம் - தள்ளுபடியான வழக்குகள்

ஒன்றிய அரசின்கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், வெளி மாநிலங்களிலிருந்து பெருவாரியான மாணவர்கள் பயின்றுவருவதால், தமிழ் மொழியைக் கட்டாயமாக்க இயலாது எனக் கூறி, வழக்கைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

chennai hc Madurai bench, Kendriya Vidyalaya schools, mandate Tamil language, Tamil language in Kendriya Vidyalaya schools, court news, court news tamil, latest court news, madurai court orders, latest court judgements, madurai court judgements, நீதிமன்ற செய்திகள், மதுரை நீதிமன்ற செய்திகள், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை, நீதிமன்ற உத்தரவுகள், நீதிமன்ற தீர்ப்புகள், தமிழ் மொழி கட்டாயம், தமிழ் மொழி கல்வி, கேந்திரிய வித்யாலயா பள்ளி, ஒன்றிய அரசு பள்ளி, தமிழ் மொழி பாடம் வழக்கு, தள்ளுபடியான வழக்குகள்
தமிழ் மொழி கட்டாயம்
author img

By

Published : Dec 2, 2021, 1:25 PM IST

மதுரை: தூத்துக்குடியைச் சேர்ந்த செல்வகுமார் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல்செய்திருந்தார்.

அதில், "உலகின் மிகப் பழமையான மொழி 'தமிழ்'. தமிழ்நாட்டில் 59 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இயங்கிவரும் சூழலில், ஒட்டுமொத்தமாக ஆயிரத்து 228 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் செயல்பட்டுவருகின்றன.

ஆனால், இந்தப் பள்ளிகளில் இந்தி பயிற்று மொழியாக உள்ளது. இலவசக் கல்வி என்னும் பெயரில், ஒன்றிய அரசு இந்தி, சமஸ்கிருத மொழியைக் கட்டாயமாக்குவதுபோல் தெரிகிறது. கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 12 லட்சத்து 78 ஆயிரத்து 271 மாணவர்கள் பயிலும் சூழலில், 95 விழுக்காடு மாணவர்கள் இந்தி அல்லது சமஸ்கிருதம் தெரியாதவர்கள்.

அவர்களுக்கு சமஸ்கிருத பாடத்தை கட்டாயமாக்குவதும், இந்தி மொழியில் பயிற்றுவிப்பதும் அநீதியானது. ஆகவே, தமிழ்நாட்டில் இயங்கும் ஒன்றிய அரசின் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும், தமிழைக் கட்டாயப் பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும்.

மேலும், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்கள் எந்த மாநிலத்தில் இயங்குகிறதோ, அந்த மாநில மொழியை கட்டாய பாடமாக்கவும், பயிற்று மொழியாக்கவும் உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, வேல்முருகன் அமர்வு விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கிற்கு இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், "ஒன்றிய அரசின்கீழ் செயல்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், வெளி மாநிலங்களிலிருந்து பெருவாரியான மாணவர்கள் பயின்றுவருகின்றனர்.

மேலும், தமிழ் மொழியையும் இங்கு விருப்பப் பாடமாகத் தேர்வு செய்துகொள்ள முடியும். இப்படி இருக்கும்பட்சத்தில் தமிழ் மொழியை இப்பள்ளிகளில் கட்டாயமாக்க முடியாது" என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

இதையும் படிங்க:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.