ETV Bharat / city

இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் - எம்.பி சு.வெங்கடேசன்! - தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

தமிழ்நாடு மீனவர்களை கைது செய்யும் இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

Centre s
Centre s
author img

By

Published : Jul 23, 2022, 6:34 PM IST

மதுரை: இதுகுறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்ந்து வருவது குறித்து நேற்று (22.07.2022) கேள்வி எழுப்பி இருந்தேன்.

'மீன்பிடித் தடைக்காலம் முடிந்த பின்னரும் தமிழ்நாடு, புதுச்சேரி மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர் - இவர்களை விடுவிக்க என்ன முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன? கடந்த மார்ச் 22ஆம் தேதி நடைபெற்ற இரு நாடுகளின் கூட்டு செயல்பாடு குழுவில் (Joint Working Group) இது குறித்து விவாதிக்கப்பட்டதா? திட்டவட்டமான தீர்வுக்கான முன் மொழிவுகள் ஏதும் வைக்கப்பட்டனவா?' என்ற கேள்விகளை எழுப்பி இருந்தேன்.

இதற்கு வெளியுறவு இணை அமைச்சர் வி. முரளீதரன் பதில் அளித்தார். 'சர்வதேச கடல் எல்லையை கடப்பதாகவும், இலங்கை கடற்பகுதியில் மீன் பிடிப்பதாகவும் குற்றம் சாட்டி இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுகிறார்கள். நடப்பாண்டில் இதுவரை 144 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 29 பேர், கடந்த ஜூன் 15க்கு பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அரசு முறை முயற்சிகளால் 144 பேரில் 138 பேர் விடுதலை உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த 138 பேரில் 115 பேர் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். 23 பேர் விரைவில் அழைத்து வரப்படுவார்கள். தற்போது 6 பேர் இலங்கை சிறையில் உள்ளனர். அவர்கள் ஜூலை 20 அன்று கைது செய்யப்பட்டவர்கள். அவர்களையும் மீட்டு கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மார்ச் மாதத்தில் நடந்த கூட்டு செயல் குழுவின் (JWG) ஐந்தாவது சுற்று சந்திப்பு, மீனவர் பிரச்சினைகளின் எல்லா பரிமாணங்களையும் உள்ளடக்கி விவாதித்தது' என்று பதில் கூறியுள்ளார்.

அமைச்சரின் பதில் அரசு எடுத்துள்ள முயற்சிகளை விவரித்தாலும், தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் தொடர் கதையாகவே உள்ளது. அமைச்சரின் பதிலில் குறிப்பிடப்பட்டு இருப்பது போல மனிதாபிமானத்தோடு இலங்கை அரசு அணுகுவதும், இரு தரப்பு உடன்பாடுகள், பேச்சு வார்த்தைகளின் முடிவுகளை எழுத்திலும், உணர்விலும் சரியாக அமலாக்க வேண்டும். ஆகவே மத்திய அரசு இன்னும் அரசு முறை முயற்சிகளை தீவிரமாக்கி இலங்கை கடற்படையின் அராஜகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். தற்போது சிறையில் உள்ள 6 தமிழக மீனவர்களும் விரைவில் விடுதலை ஆக வேண்டும். விடுவிக்கப்பட்ட 23 பேர் விரைவில் வீடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:டெல்லி அரசின் புதிய கலால் கொள்கை மீதான சிபிஐ விசாரணை - முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.