கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 18 பேருக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் எட்டாவது கரோனா கண்டறியும் மையத்தை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி மதுரை இராசாசி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா கண்டறியும் மையம் அமையவுள்ளது.
இந்தத் தகவலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். மேலும், மதுரையில் அமையவுள்ள இந்த கரோனா கண்டறியும் மையத்தின் மூலம் அப்பகுதியிலுள்ள மக்களுக்கு வைரஸ் தொற்று உள்ளதா என்பது குறித்த பரிசோதனையை எளிதில் செய்ய முடியும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நாடு முழுவதும் ஊரடங்கு - முதலமைச்சர் ஆலோசனை