ETV Bharat / city

சிறப்பு டிஜிபிக்கு எதிராகப் போராடிய 27 பேர் மீதான வழக்குகள் ரத்து! - Sexual complaint against Special DGP

மதுரை: சிறப்பு டிஜிபிக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட 27 நபர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரைக்கிளை
மதுரைக்கிளை
author img

By

Published : Mar 29, 2021, 7:00 PM IST

மதுரையைச் சேர்ந்த சசிகலா, செல்வராஜ், ராஜேஸ்வரி உள்பட 27 நபர்கள் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்திருந்தனர்.

அதில், "சிறப்பு டிஜிபியுடன் பணிபுரியும் பெண் ஐபிஎஸ் அலுவலரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதற்கு கண்டனம் தெரிவிக்கும்விதத்தில் கடந்த மார்ச் 3ஆம் தேதி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெளியே பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 27 நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் 27 நபர்கள் மீது இரண்டு பிரிவுகளின்கீழ் பொய்யாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோன்று குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடைபெறும் சம்பவத்திற்கு எதிராகப் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.

இதற்காகப் பொய்யான வழக்குகள் பதிவுசெய்யப்படுவது ஏற்கத்தக்கது அல்ல, எனவே, எங்கள் 27 பேர் மீது பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்த இடைக்காலத் தடைவிதிக்கவும், எங்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்ய உத்தரவிடவும் வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஹேமலதா, 27 நபர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்துசெய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.

இதையும் படிங்க: உலக பொருளாதாரத்தை மீண்டும் மிதக்கவைத்த 'எவர்கிவன்'!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.