ETV Bharat / city

ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரிய வழக்கு தள்ளுபடி - ஜெயலலிதாவின் பிறந்தநாள் அரசு விழா

மதுரை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை
author img

By

Published : Feb 24, 2020, 6:27 PM IST

சிவகங்கை திருப்புவனத்தைச் சேர்ந்த மணிமாறன் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல்செய்திருந்தார்.

அதில், "நான் அதிமுக கட்சியின் சிவகங்கை மாவட்ட மாணவரணி பொருளாளராக உள்ளேன். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 11 ஆண்டுகளாக தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பில் இருந்துள்ளார். 1984 முதல் 1989 வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

தனது தனித்துவமான குணங்களால் உலகின் மிகச்சிறந்த தலைவராக இருந்துள்ளார். அரசியலில் முழு ஈடுபாட்டுடன் பயணித்த ஜெயலலிதா உள்ளாட்சித் தேர்தல்களில் பெண்களுக்கான 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டையும் கொண்டுவந்தார். அவரின் சிறப்பான நிர்வாகத் திறன்களைப் பாராட்டி பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டிருந்தார்.

சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

மேலும் அந்த மனுவில், "ஈடு செய்ய இயலாத, ஒப்பற்ற தலைவரான ஜெயலலிதாவை உலகின் பல்வேறு தலைவர்களும் பாராட்டியுள்ளனர். 2016 டிசம்பர் 5இல் அவர் இறந்தார். அவரது பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்கக்கோரி மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆகவே ஜெயலலிதாவின் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவிக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன், மனுதாரர் பொருத்தமான காரணங்கள் இன்றி வழக்கைத் தொடர்ந்துள்ளார் எனக்கூறி மனுவைத் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:

கோடையின் தாக்கத்தைச் சமாளிக்கும் உயிரியல் பூங்கா!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.