ETV Bharat / city

சாத்தூர் பட்டாசு விபத்து நிவாரண வழக்கு: டிச. 6 அன்று இறுதி உத்தரவு - சாத்தூர் பட்டாசு விபத்தின் நிவாரண வழக்கு டிசம்பர் 6இல் இறுதி உத்தரவு

சாத்தூர் அருகே பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடும், அரசுப் பணியும் வழங்கக்கோரிய வழக்கை டிசம்பர் 6ஆம் தேதி, இறுதி உத்தரவிற்காக ஒத்திவைத்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

rajammal fireworks accident in Sattur, sattur fireworks accident, சாத்தூர் பட்டாசு விபத்தின் நிவாரண வழக்கு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை, chennai high court madurai bench, mhc madurai bench
sattur fireworks accident
author img

By

Published : Nov 27, 2021, 6:34 AM IST

மதுரை: விருதுநகர் மாவட்டம் சிப்பிப்பாறையைச் சேர்ந்த சிவ பாலசுப்ரமணியன், கிருஷ்ணவேணி உள்ளிட்ட ஆறு பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தனித்தனியாக மனு தாக்கல்செய்திருந்தனர்.

அந்த மனுக்களில், "தங்களின் உறவினர்களாகிய ஆறு பேர் 2020 மார்ச் 20 அன்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரை அடுத்துள்ள சிப்பிப்பாறை ராஜம்மாள் பயர் ஒர்க்ஸ்-இல் நடந்த வெடி விபத்தில் சிக்கினர். இதில், படுகாயமுற்றவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.

நிவாரணம் வேண்டும்

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணமாக 10 லட்சம் ரூபாய், அரசுப்பணி வழங்குவதாகவும் அரசு அறிவித்தது. மேலும், தற்காலிக நிவாரணமாக ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பதாகவும் அரசு அறிவித்தது.

ஆனால், மத்திய, மாநில அரசுகள் இதுவரை எவ்வித நிவாரணமும் அளிக்கவில்லை. தற்பொழுது, வருவாய் இன்றி எங்களது குடும்பங்கள் தவித்துவருகின்றன. எனவே, எங்கள் பொருளாதாரத்தைக் காத்திட குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழ்நாடு அரசுத் தரப்பில், "சாத்தூர் தீ விபத்தில் இறந்தவர்கள் குறித்து ஆய்வுமேற்கொண்டு, அவர்கள் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் பரிந்துரைசெய்துள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் இவ்வழக்கை டிசம்பர் 6ஆம் தேதி இறுதி உத்தரவிற்காக ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதல்: நால்வர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.