மதுரையைச் சேர்ந்த முகம்மது ரஸ்வி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல்செய்தார். அந்த மனுவில், "தமிழ்நாடு அரசு பொது இடங்கள், பேருந்து நிலையங்கள், போக்குவரத்துச் சாலைகளுக்குப் பல்வேறு பெயர்களைச் சூட்டிவருகிறது.
இதன் அடிப்படையில் இனி எதிர்வரும் காலத்தில் தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பாடுபட்ட காமராஜர், தமிழ் கவிஞர் மகாகவி பாரதியார், திருப்பூர் குமரன், கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை, உ.வே. சாமிநாத ஐயர், ராஜராஜ சோழன் போன்றவர்களின் பெயர்கள் - மேலும் 63 நாயன்மார்கள், 12 ஆழ்வார்கள் போன்றோரின் பெயர்களைச் சூட்ட உத்தரவிட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
நாயன்மார்கள், ஆழ்வார்கள் தோன்றிய இடம் தமிழ்நாடு
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, ஆனந்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது இந்த வழக்கில் மனுதாரர், முதல் எதிர் மனுதாரராகத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரைச் சேர்த்திருந்தார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த நீதிபதிகள், அனைத்து வழக்குகளிலும் தமிழ்நாட்டின் தலைமைச் செயலரைச் சேர்ப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றனர். எனவே தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலரை முதல் எதிர் மனுதாரராகச் சேர்ப்பதை நீக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் மனு குறித்து பொதுப்பணித் துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல்செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: காவிரி தவழ்ந்தோடும் சோழ நாட்டை அழகுபடுத்தும் பணி தீவிரம்