மதுரை: சின்னசொக்கிகுளத்தைச் சேர்ந்த கே.ஆர்.ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், 'தமிழ்நாட்டில் மதுரை, வேலூர், பாளையங்கோட்டை உள்பட பல்வேறு சிறைகளிலுள்ள கைதிகளில் 125 பேர், 10 ஆண்டுகள், 15 ஆண்டுகள், 20 ஆண்டுகள் என சிறையில் இருந்து வருகின்றனர்.
அவர்களுக்கு 2018ஆம் ஆண்டு அரசு ஆணையின்படி முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி, முரளிசங்கர் ஆகியோரது அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை குறித்து தமிழ்நாடு சிறைத்துறை கூடுதல் முதன்மைச் செயலர் 12 வாரங்களில் பரிசீலிக்க உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: மதுரவாயல் சுங்கச்சாவடி வழக்கு முடித்துவைப்பு!